ksmuthukrishnan எழுதியவை | 09/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 17

சு.சுகந்தி suga_sugan@yahoo.com
கே: இரண்டு வாரம் எங்கே போனீர்கள். உங்கள் கேள்வி பதில் அங்கம் இல்லாமல் என்னவோ போல இருக்கிறது?

ப: உண்மையாகவா. சந்தோஷம். இந்த வாரக் கேள்வி பதில்களைக் கம்போடியாவில் உள்ள சியாம் ரியாப் எனும் இடத்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாக அனுப்புகிறேன். அதற்கு முன்னால் அனுப்பப்பட்டவை மின்னஞ்சல் சுனாமியில் காணாமல் போய்விட்டன. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இதே கேள்வி பதில்களை மலேசியாவுக்குள் அனுப்பி இருந்தால் ஐந்து வினாடிகளில் போய்ச் சேர்ந்து விடும். கட்டணம் பத்து பதினைந்து காசோடு முடிந்திருக்கும். ஆனால், கம்போடியாவில் இருந்து இதை அனுப்ப ஏழு ரிங்கிட். அனுப்புவதற்கு இருபது நிமிடங்கள் நேரம் பிடிக்கிறது.

மலேசியா தொழில்நுட்பத்தில் எந்த அளவு முன்னேறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அங்கோர் வாட் சூர்யவர்மன், ராஜவர்மன், யசோத வர்மன், ஹர்ஷவர்மன் பற்றிய ஒரு வரலாற்று புதினம் விரைவில் நம்முடைய நண்பனில் வெளிவரும். படியுங்கள்.

ஒரு முக்கியமான விஷயம். பயணப் பெட்டியில் இருந்த என்னுடைய கைப்பேசி, Flash Drive எனப்படும் இயக்கி காணாமல் போய்விட்டன. கம்போடிய சியாம் ரியாப் விமான நிலையத்திலா இல்லை கோலாலம்பூர் விமான நிலையத்திலா என்று தெரியவில்லை. அதே எண்களுக்கு மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுவரை தொடர்பு இருக்காது.

வி.வெங்கடாசலம் venkatnelah@gmail.com
கே: இணையம் யாருக்குச் சொந்தமானது?

ப: தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் இல்லை. ஒவ்வொரு நாடும் அதன் இணையத் தொடர்புகளைத் தனித்தனியாகக் கவனித்துக் கொள்கின்றன. இணையத் தளங்களின் பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் முகவரி போன்றவற்றை மட்டும் The Internet Corporation for Assigned Names and Numbers எனும் அமைப்பும் Internet Assigned Numbers Authority எனும் அமைப்பும் கவனித்துக் கொள்கின்றன.

வி. ராஜாராம் vrajaraman.2003@gmail.com
கே: நீங்கள் எந்த விண்டோஸ் இயக்க முறைமையைப் பயன்படுத்துகிறீர்கள்?

ப: என்னிடம் இரண்டு கணினிகள் உள்ளன. மடிக்கணினியில் விண்டோஸ் விஸ்த்தா Ultimate. மேசைக் கணினியில் விண்டோஸ் ‘எக்ஸ்பி’யைப் பயன் படுத்துகிறேன். இந்த இடத்தில் மறுபடியும் ஒரு வேண்டுகோள். நம் சமுதாயம் கணினித் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும்.

இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்தவர்கள் என்பதை உலகத்திற்கு மெய்ப்பிக்க வேண்டும். கணினியை விரட்டிப் பிடியுங்கள். தயவு செய்து பிள்ளைகளுக்கு கணினியை வாங்கிக் கொடுங்கள்.

விக்னேஷ்வரன் அடைக்கலம் viknesh2cool@gmail.coம்
கே: நான் ஈப்போவில் வசிக்கிறேன். உங்கள் எழுத்துகள் எனக்கு மலேசிய நண்பன் நாளிகை வழி நல்ல அறிமுகம். கடைநிலை வாசகர்களும் இலகுவாக புரியும்படி உங்கள் கட்டுரைகள் அமைகின்றன. தற்சமயம் கணினி தொடர்பான விடயங்களை எழுதி வருவதை அறிகிறேன். நம் மக்களுக்கு மிக பயனான ஒன்று ஐயா. ஏன் இதில் வரும் கேள்வி-பதில்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாமே?

ப: உங்கள் கருத்திற்கு நன்றி. பலர் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு.அன்பழகன் அவர்களும் சொல்லி வருகிறார். ‘மலேசிய கணினி கேள்வி-பதில்’ எனும் நூல் விரைவில் வெளிவரும்.


கே: இணையத்தில் புள்ளி விவர வேலைகள் கிடைக்குமா? பல இணையத் தளங்களுக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் Pay Pal மூலமாகக் கட்டணம் கேட்கிறார்கள். என்ன செய்வது?

ப: Pay Pal என்பது இணையத்தின் மூலமாகக் கட்டணம் செலுத்தும் முறை. உலகம் முழுமையும் பரவலாக உள்ளது. இதுவும் ஒரு கிரெடிட் கார்ட் முறைதான். அருகாமையில் உள்ள வங்கியில் விசாரித்துப் பாருங்கள். புள்ளி விவர வேலைகள் அல்லது Data Base Entry வேலைகள் இணையத்தில் நிறைய உள்ளன.

உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். மேலே சொன்ன அந்த ஆங்கில வாசகங்களை Googleல் தட்டி Job Opportunities என்று அச்சு செய்து தேடிப் பாருங்கள். ஆயிரக்கானத் தொடர்புகள் வரும். பொருத்தமானதைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: