ksmuthukrishnan எழுதியவை | 09/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 16

வி.ஜெயஸ்ரீ vs.jaya87@yahoo.com
கே
: Windows Vista என்பதற்கும் Windows XP என்பதற்கும் என்ன வித்தியாசம். இந்த இரண்டில் எது நல்லது?

ப: இரண்டுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. 2001 அக்டோபர் மாதம் 25ஆம் தேதி Windows XP எனும் இயக்க முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. இயக்க முறைமை என்றால் Operating System. விண்டோஸ் எக்ஸ்பிஒரு நல்ல அருமையான இயக்க முறைமை அல்லது இயக்கச் செயலி. உலக முழுமையும் கோடிக் கணக்கானவர்களின் மனதைக் கவர்ந்தது.

eXPerience எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அனுபவம் என்று பொருள். இதில் வரும் XP எனும் எழுத்துளை மட்டும் தனியாக எடுத்து விண்டோஸ் எக்ஸ்பிஎன்று பெயர் வைத்தார்கள். இதுவரை வெளி வந்த இயக்கச் முறைமைகளில் அனைவரின் நெஞ் சங்களையும் தொட்டது இந்த விண்டோஸ் எக்ஸ்பி‘.

இன்னும் செல்லப் பிள்ளையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. Windows Vista இருக்கிறதே, இது வந்த பிறகு விண்டோஸ் எக்ஸ்பிக்கு கல்லறை கட்டப்படும் என்று பலர் பந்தயம் கட்டினார்கள். உலகமே அப்படித்தான் நினைத்தது.

ஆனால், நடந்தது வேறு. எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுந்து ஒரு பிள்ளையை வளர்ப்பதும்; போற்றிப் போற்றி இன்னொரு பிள்ளையை வளர்ப்பதும்; இன்றும் சில குடும்பங்களில் நடக்கின்ற ஓர வஞ்சனைதான். மைக்ராசாப்ட் நிறுவனமும் அந்த மாதிரியான பாரபட்சம் காட்டியது உண்மைதான்.

ஓர் ஐந்து வருடங்களில் விண்டோஸ் எக்ஸ்பியை ஓரம் கட்டி விட்டு விஸ்த்தாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார்கள்.

விண்டோஸ் விஸ்த்தாவைப் பற்றிய சில ரகசியங்களைச் சொல்கிறேன். இதை உருவாக்க இருபத்தைந்து பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவானது. மில்லியன் இல்லை. பில்லியன். ஜொகூர் பாருவில் இருந்து தாய்லாந்து வரை வடக்கு-தெற்கு   நெடுஞ்சாலை போட்டிருக்கிறார்களே, அந்த மாதிரி இரண்டு சாலைகள் போட்டுவிடலாம். அவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார்கள். விஸ்த்தாவைத் தயாரித்து நாற்பது பில்லியன் ரிங்கிட் பார்க்க வேண்டும் என்பது அவர்களுடைய இலக்கு. ஆக,  5000 Programmers எனும் நிரலர்கள் அல்லது செயல் வரைவாளர்கள் அல்லும் பகலும் ஆறு ஆண்டுகள் உழைத்தார்கள்.

அமெரிக்காவில் 700 தமிழர்கள். பெங்களூரில் உள்ள மைக்ராசாப்ட் ஆய்வு மையத்தில் 3000 இந்தியர்கள். ஆக மொத்தம் 10,000 பேர் விஸ்த்தாவை வடிவம் அமைப்பதில் வேலை செய்தனர்.

கடைசியில் விண்டோஸ் விஸ்த்தா தோல்வியில் முடிந்தது. தொட்டால் சிணுங்கி போல எதற்கு எடுத்தாலும் சிணுங்கிக் கொள்ளும். சின்னப் பிரச்னைக்கும் பெரிதாக அடம் பிடிக்கும். ஒரு நிரலியைப் பதிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

கூடுதலாகப் பணம் போட்டு விஸ்த்தாவையும் அதற்கான பொருள்களையும் வாங்க வேண்டும். அப்படியே வாங்கிப் போட்டாலும் அது சரி இல்லை, இது சரி இல்லை என்று கணினியின் நச்சரிப்பு. ஒரு சின்ன தவறு என்றாலும் வேலை நிறுத்தம் செய்யும்.

அதைச் சரி கட்ட அவசரம் அவரமாக Windows 7 எனும் புதிய இயக்கச் செயலியை உருவாக்கி இருக்கிறார்கள். முதலில் இதன் பெயர் Blackcomb. அப்புறம் Vienna என்று பெயரை மாற்றினார்கள். கடைசியில் விண்டோஸ் 7 என்று பெயர்.

ஆக, இந்த வருடம் அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியே வருகிறது. வரட்டும். இது என்ன செய்கிறது என்று பார்ப்போம். இன்னும் பல விண்டோஸ்கள் வரலாம். இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்பியின் மீது மக்களுக்கு இருக்கும் விசுவாசம் மாறவே மாறாது. அதற்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. விண்டோஸ் எக்ஸ்பியைக் காப்பாற்றுங்கள் எனும் ஓர் இயக்கத்தையே அமெரிக்காவில் உருவாக்கி இருக்கிறார்கள்.

தனசீலன் சீலன் thanaseelan101@yahoo.com
கே
: ஐயா, நான் 1.25GB RAM பயன்படுத்துகிறேன். ஆனால், கணினியில் 704 MB என்று மட்டும் காட்டுகிறது. ஏன்?

ப: RAM என்பதை தற்காலிக நினைவி அல்லது நினைவகச் சிப்பு என்று சொல்லலாம். SD RAM, DDR1, DDR2, DDR3, எனும் பல வகைகள் உள்ளன. இப்பொழுது உள்ள நவீனக் கணினிகள் DDR3 ரக நினைவிகளைப் பயன்படுத்துகின்றன. இவை கணினியின் உள்ளே செருகப்பட்டிருக்கும். கணினியைத் தொடக்கியதும் எல்லா செய்திகளும் விவரங்களும் இந்த நினைவியில்தான் முதலில் தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப்படும்.

சரி. உங்கள் பிரச்னைக்கு வருகிறேன். 1.25GB RAM என்று நீங்கள் சொல்வதில் தப்பு இருப்பதாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட நினைவிகள் புழக்கத்தில் இல்லை. என் கணக்குப்படி நீங்கள் மூன்று அல்லது நான்கு நினவிகளை ஒரே சமயத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அதில் 512MB நினைவியும் 256MB நினைவியும் தான் வேலை செய்கின்றன. மற்றவை வேலை செய்யவில்லை. அதற்கு காரணம் அவற்றின் Bus Speed எனும் வேக அளவு. ஒன்றுக்கும் மேற்பட்ட நினவிகள் இருந்தால், எதன் வேக அளவு குறைவாக இருக்கிறதோ அதைத் தான் கணினி முதலில் ஏற்றுக் கொள்ளும்.

வேக அளவு கூடுதலாக உள்ளதை ஒதுக்கி விடும். அந்த வகையில் உங்கள் கணினியில் வேக அளவு குறைவான நினைவிகளே வேலை செய்து கொண்டிருக்கின்றன. கணினி பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் சென்று குறையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு செய்தி. ஈப்போவில் கணினி பழுது பார்க்க வேண்டும் என்றால் கீழே காணும் என்னுடைய கைப்பேசிக்கு அழைக்கலாம். இந்திய மாணவர்கள் சிலர் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் பழுது பார்க்கும் சேவையும் செய் கிறார்கள். பழுது பார்ப்பதற்கு வழக்கமான கட்டணம் உண்டு என்பதையும் சொல்லி விடுகிறேன்.

சு.சுகந்தி suga_sugan@yahoo.com
கே
: இரண்டு வாரம் எங்கே போனீர்கள். உங்கள் கேள்வி பதில் அங்கம் இல்லாமல் என்னவோ போல இருக்கிறது?

ப: ஆஹா… உண்மையாகச் சொல்கிறீர்களா இல்லை எனக்கு சளி பிடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்களா. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த வாரக் கேள்வி பதில்களைக் கம்போடியாவில் உள்ள சியாம் ரியாப் எனும் இடத்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாக அனுப்புகிறேன்.

அதற்கு முன்னால் அனுப்பப்பட்டவை மின்னஞ்சல் சுனாமியில் திடீரென்று காணாமல் போய்விட்டன. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்  கொள்கிறேன். அங்கோர் வாட் சூர்யவர்மன், ராஜவர்மன் பற்றிய ஒரு வரலாற்று புதினம் விரைவில் நம்முடைய நண்பனில் வெளிவரும். படியுங்கள்.

வி.வெங்கடாசலம் venkatnelah@gmail.com
கே
: இணையம் யாருக்குச் சொந்தமானது?

ப: தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் இல்லை. ஒவ்வொரு நாடும் அதன் இணையத்   தொடர்புகளைத் தனித்தனியாகக் கவனித்துக் கொள்கின்றன. இணையத் தளங்களின்   பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் முகவரி போன்றவற்றை மட்டும் The Internet Corporation for Assigned Names and Numbers எனும் அமைப்பும் Internet Assigned Numbers Authority எனும் அமைப்பும் கவனித்துக் கொள்கின்றன.

வி. ராஜாராம் <vrajaraman.2003@gmail.com>
கே
: நீங்கள் எந்த விண்டோஸ் இயக்க முறைமையைப் பயன்படுத்துகிறீர்கள்?

ப: என்னிடம் இரண்டு கணினிகள் உள்ளன. மடிக்கணினியில் விண்டோஸ் விஸ்த்தா Ultimate. மேசைக் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன் படுத்துகிறேன். நம் சமுதாயம் கணினித் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும்.

இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்தவர்கள் என்பதை உலகத்திற்கு மெய்ப்பிக்க வேண்டும். கணினியை விரட்டிப் பிடியுங்கள். தயவு செய்து பிள்ளைகளுக்கு கணினியை வாங்கிக் கொடுங்கள். கணினிக்குச் செலவு ஆவதை žரியல் பார்க்க செலவு ஆனதாக நினைத்துக் கொள்ளுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: