ksmuthukrishnan எழுதியவை | 09/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 12

கணினிக் களஞ்சியம்

Application- பயன்பாடு
Apply-
செயலாக்கு
Archive-
ஆவணக் காப்பகம்
Artificial Intelligence-
செயற்கை நுண்ணறிவு
Attachment-
உடன் இணைப்பு
Audio-
கேட்பொலி
Audio Graphics-
ஒலி வரையம்
Authenciate-
சான்று உறுதிப்படுத்து
Auto-
தானியங்கு
Avatar-
அவதாரம்
.az-
அஜெர்பாய்சான் நாட்டின் பெரும் களப் பெயர்
Backup and Restore-
பாதுகாப்பும் மீட்டு அளிப்பும்
Backup Storage-
பாதுகாப்புச் சேமிப்பகம்
Banner-
பட்டிகை, பதாகை
Bar-
பட்டை
Battery-
மின் வழங்கி
.bb-
பார்படோஸ் நாட்டின் பெரும் களப் பெயர்
.bd-
வங்காள தேசத்தின் பெரும் களப் பெயர்

கருபழநீர் பழநி karupalaneerpalani@yahoo.com
கே: நான் ஜொகூர் பாருவில் இருக்கிறேன். அண்மையில் புதிதாக ஒரு கணினி வாங்கினேன். Norton Antivirus எனும் நச்சு நிரல் எதிர்ப்பியை ஏழு நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும் என்று எச்சரிக்கை வருகிறது. அதன் பிறகு என்ன ஆகும். என் கணினி நச்சு நிரல்களால் பாதிக்கப் படுமா?

ப: நீங்கள் Trial Version எனப்படும் வெள்ளோட்டப் பதிப்பைப் பயன் படுத்துகிறீகள் என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கட்டணம் கட்டி முழுமையாகப் பதித்துக் கொள்ள வேண்டும். Norton Antivirus நச்சு நிரல் இலவசமாகக் கிடைக்காது. ஏறக்குறைய RM180 கட்டணம் வரும். இலவசமாக நச்சு நிரல் வேண்டும் என்றால் http://www.avg.com எனும் முகவரியில் கிடைக்கும். அல்லது http://www.google.com.my எனும் தேடல் இயந்திரத்தில் free antivirus என்று குறிப்பிட்டு தட்டிப் பாருங்கள். நிறைய இணையத் தளங்களின் முகவரிகள் கிடைக்கும். பிடித்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அகஸ்தியன் சின்னப்பன் முத்திரியார்
augustin@malaysiaairlines.com
கே: நான் உங்களுடைய தீவிர வாசகன். மலேசிய விமான நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சார், நீங்கள் பதில் கொடுக்கும் விதம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் இணையத்தில் எங்கே கிடைக்கும். உதவி செய்ய முடியுமா?

ப: மாணவர்களுக்கு என்று இலட்சக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன. பணம் காசு பார்க்காமல் இலவசமாகக் கொடுக்கிறார்கள். நம் நாட்டில் http://www.tutor.com.my எனும் முகவரியில் போய்ப் பாருங்கள். இங்கிலாந்தில் http://www.activityvillage.co.uk எனும் ஓர் இடம் இருக்கிறது. இதைத்தவிர http://www.thekidzpage.com எனும் இணையத்தளம் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

sivanes sivanes <sivanes1526@gmail.com>
கே: மலேசியாவில் தமிழில் Bloggers இருக்கிறார்களா?

ப: வெகு நாட்களாக நான் எதிர்பார்த்த கேள்வி. Bloggers என்பவர்களை பதிவர்கள் என்று சொல்லலாம். உலகம் முழுமையும் ஏறக்குறைய ஒரு கோடி வலைப் பதிவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எழுத்தாளர் சுஜாதா வைத்திருந்தார். இப்போது எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, பாமரன் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டு போகலாம். மலேசியாவில் தமிழ் வலைப்பதிவர்கள் குறைந்தது இருபது பேராவது இருப்பார்கள். அவர்களிடம் ஓர் இயக்கமே உருவாகிவிட்டது. பெருமைக்குரிய செய்தி. மனதில் பட்டதை எல்லாம் அன்றாடம் எழுதிக் குவிக்கிறார்கள்.

என்னிடம் ஒரு மாணவர் 1983ல் கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் பயின்றார். அவருடைய பெயர் குமரன். இப்போது அவர் நம் நாட்டில் ஒரு தலை சிறந்த வலைப்பதிவர். யாருக்குப் பெருமை. எனக்குத்தான். அடியேன் கற்றுக் கொடுத்த தமிழ். ஒரு காலத்தில் என்னிடம் ஏச்சுகள், பேச்சுகள், அடிகள் வாங்கிய ஒரு மாணவர் இப்போது உலகம் புகழும் வலைப்பதிவர். http://madapuraa.blogspot.com எனும் வலைப்பதிவை இயக்கிக் கொண்டிருக்கிறார். சபாஷ் குமரன்!

mala visvanathan <shiwani2572@gmail.com>
கே: மலேசியாவில் தமிழ் Bloggers களின் முன்னோடி யார்?

ப: குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், இப்போதைக்கு பேரா, கோப்பேங் விக்னேஸ்வரன் தான் அந்தப் பெருமைக்கு உரியவர் என்பது என் கருத்து. தமிழர்கள் அனைவரும் தமிழைப் படிக்க வேண்டும். மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கை உலகை உயர்த்திக் காட்ட வேண்டும் எனும் பிடிப்புடன் எழுதி வருகிறார். நேரில் பார்த்தால் இந்தப் பையனா என்று நினைக்கத் தோன்றும். சின்ன வயது. ஆனால், ஓர் அறிவுக் கடல். தெளிவான சிந்தனை. மென்மையான பேச்சு. காரமான எழுத்து. http://vaazkaipayanam.blogspot.com எனும் வலைப்பதிவில் எழுதி வருகிறார். போய்ப் பாருங்கள். இவருடைய பழைய மன உலைச்சல்களின் தாக்கங்களைப் பெரிது படுத்தக் கூடாது. மலேசியாவில் இவரைப் போல நிறைய இலைமறை காய்கள் உள்ளன. அவர்களை அடையாளம் காண வேண்டும். வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். புதிய பரிமாணத்தைக் கொடுக்க வேண்டும். மலேசியத் தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

syed abdullah <syedabdullah86@gmail.com>
கே: சார், நான் COMPAQ PRESARIO V3700 எனும் மடிக்கணினியை வாங்கி இருக்கிறேன். அதில் Windows XP ஐ எப்படி பதிப்பது. சார், உங்களுடைய தொலை பேசி எண்கள் தேவை. உங்களோடு பேச ஆசைப் படுகிறேன்.

ப: இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். இருந்தாலும் பரவாயில்லை. புதிதாக எந்த ரக கணினியை வாங்கினாலும் வாங்கிய இடத்திலேயே விண்டோஸ் செயலியைப் பதித்துக் கொடுக்கச் சொல்லுங்கள். ஒரு RM200 க்குள் பிரச்னை தீர்ந்தது. பின்னாளில் பிரச்னை வந்தால் அவர்களிடமே எடுத்துச் சென்று தீர்வு காணலாம். அது இல்லாமல் நீங்களாகவே விண்டோஸ் செயலியைப் பதித்துக் கொள்ள வேண்டும் என்றால் கணினியைப் பற்றி உள்ளேயும் வெளியேயும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கற்றுக்குட்டி கணினி வித்துவான்களிடம் உதவி கேட்கலாம். தப்பில்லை. ஆனால், கணினிப் பெட்டியை கஞ்சித் தொட்டிக்குள் போட மனசு இருந்தால் தாராளமாக அந்த விஷச் சோதனையில் இறங்கலாம். சரி. தம்பி சையது அப்துல்லா, ஏற்கனவே கைப்பேசியின் எண்களைக் கொடுத்து நான் பட்ட பாடு இருக்கிறதே; அதை மறக்க முடியாது. மறுபடியுமா! வேண்டாம் தம்பி! இருந்தாலும் பாருங்கள், உங்களுடைய நீண்ட கடிதம் என் மனதை நெகிழ வைத்துவிட்டது.

neelan_t@yahoo.com.my
கே: எதிர்காலத்தில் கணினி …

ப: ஏன் நிறுத்திவிட்டீர்கள். கேளுங்கள் ஐயா கேளுங்கள். ஓர் அடி அகலம் ஓர் அடி நீளம் ஓர் அடி உயரம். உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் கொண்டு வரும். பார்க்க வைக்கும். ரசிக்க வைக்கும். ஒரே வினாடியில் ஐஸ்வர்யா ராயை உங்கள் முன் பேச வைக்கும். அவர் போட்டிருக்கும் நறுமணம் நாசியைத் துளைக்க வைக்கும். மலேசியாவில் இருந்தவாறு அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டின் கதவைத் திறக்க வைக்கும். அந்த வீட்டின் விளக்குகளைப் போட வைக்கும். ஊஞ்சலை ஆட்ட வைக்கும். போகப் போக கணினிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு சங்கத்தை உருவாக்கிக் கொள்ளும். உரிமைகளைக் கேட்கும். மீறினால் சண்டைக்கு நிற்கும். கதவடைப்பு செய்யும். மனிதன் தலையில் கையை வைத்து ஒப்பாரி வைக்கவும் செய்யும். நடக்கும். கண்டிப்பாக நடக்கும். இது ஒரு தீர்க்கதரிசனம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் மின்னஞ்சல் முகவரி:

ksmuthukrishnan@gmail.com
அவசர உதவிக்கு: HP: 0125838171

Advertisements

Responses

  1. sir how to translate malay/english words to tamil words pls help me. thank you sir.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: