ksmuthukrishnan எழுதியவை | 09/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 18

ஈஸ்வரி சீலன் eswarysilan@yahoo.com.my
கே
: சில குறுந்தட்டகங்கள் CD-R என்றும் CD-RW என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இதன் வேறுபாடுகள் என்ன?

ப: CD அல்லது Compact Disc என்றால் அழுத்தமான குறுந்தட்டகம் என்று பெயர். இதில் படங்கள், cdதிரைப்படங்கள், காட்சிகள், பாடல்கள், ஆவணங்கள் என்று கணினி படிக்கக்கூடியதை எல்லாம் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

CD-ROM எனும் தட்டகச் சாதனத்தில் இந்தச் சிடியைச் செருகி அதன் உள்ளே இருக்கும் தகவல்களைப் படித்துப் பார்க்கலாம். பதிவிறக்கம் செய்யலாம். மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

சிடி என்பது ஒரு பழைய வகையான தட்டகம். இப்போது DVD, Blu Ray HD என்று புதிய வகையான தட்டகங்கள் வந்துவிட்டன. இவற்றில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. விலை அதிகம் இல்லை. சரி.

உங்கள் கேள்விக்கு வருகிறேன். CD-R என்றால் Compact Disc Read என்று அர்த்தம். இந்தத் தட்டகத்தில் ஏற்கனவே எழுதப்பட்டதை மட்டுமே படிக்க முடியும். புதிதாக எதையும் எழுதிச் சேர்க்க முடியாது.

CD-RW என்றால் Compact Disc Read Write என்று அர்த்தம். இந்தத் தட்டகத்தில் எத்தனை முறை வேண்டும் என்றாலும் எழுதலாம்; எழுதியதை அழிக்கலாம்; மறுபடி புதிதாகவும் எழுதலாம். இந்த இரண்டில் CD-Rன் விலை குறைவு. தரமான வெற்றுச் சிடி 50 சென்னுக்கு கிடைக்கும். cd-roms

CD-RW வகையைச் சேர்ந்த சிடி இரண்டு ரிங்கிட்டிற்குள் கிடைக்கும். அதிகமாகச் சூடு ஏறினால் கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.

எந்தக் கணினிப் பொருளாக இருந்தாலும் கவனமாக, பக்குவமாகக் கையாள வேண்டும். முரட்டுத் தனமாகப் பயன் படுத்தக் கூடாது. பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

கவி நாயர் மாதவன் ka_v18@yahoo.com
கே
: DELL கணினிகள் தரம் வாய்ந்தவை என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் மற்ற வகையான கணினிகள் எல்லாம் தரம் இல்லாதவையா?

ப: நல்ல கேள்வி. சாலையில் ஓடும் கார்களில் எது தரம் வாய்ந்தவை, எது தரம் இல்லாதது என்று சொல்ல Dell Logoமுடியுமா. பெட்ரோல் போட்டால் எல்லா கார்களும் ஓடும். ஆனால், அதன் சிறப்புத் தன்மைகள் விலைக்கு ஏற்றவாறு மாறும். அவ்வளவுதான்.

அதே போலதான் கணினிகளும்.  DELL என்பது ஓர் அனைத்துலக கணினி நிறுவனம். இந்த நிறுவனத்தை மைக்கல் டெல் என்பவர் மூன்று இலட்சம் டாலர்களைக் கடனாக வாங்கி 1984ல் உருவாக்கினார். படிப்படியாக வளர்ந்தது. இப்போது அதன் மதிப்பு 3000 கோடி ரிங்கிட்.

கணினிச் சாதனங்களைத் தயாரிக்கும் மற்ற நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்கி புதிய ரகக் கணினிகளை உருவாக்குகிறார்கள். உள்ளே உள்ள சாதனங்கள் எல்லாமே மற்ற நிறுவனங்கள் தயாரித்தப் பொருட்கள்.

மைக்ராசாப்ட் நிறுவனத்திடமிருந்து விண்டோஸ் செய்லியை வாங்குகிறார்கள். NVidida நிறுவனத்திடமிருந்து வரைகலைச் சாதனத்தை வாங்குகிறார்கள். AMD நிறுவனத்திடமிருந்து Processor எனும் சாதனத்தை வாங்குகிறார்கள். Asus நிறுவனத்திடமிருந்து தாய்ப்பலகையை வாங்குகிறார்கள். nvidia-logo-150x150

Creative நிறுவனத்திடமிருந்து ஒலிச்சாதனத்தை வாங்குகிறார்கள். Kingston நிறுவனத்திடமிருந்து தற்காலிக நினைவிகளை வாங்குகிறார்கள். இலட்சக்கணக்கில் வாங்குவதால் விலையும் மலிவு.

அப்புறம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து DELL Inspiron 007 என்று ஏதாவது ஒரு புதிய வகைக் கணினியை உருவாக்கி விற்பனைக்கு அனுப்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தவாதமும் கொடுக்கிறார்கள்.

ஆக, டெல் கணினிகள் தரம் வாய்ந்தவை என்று சொல்வதில் தப்பு இல்லை. நாணயத்திற்குப் பேர் போனது டெல் நிறுவனம். விலை சற்று கூடுதல் என்றாலும் நம்பகரமானவை.

அகஸ்டியன் சின்னப்பன் முத்திரியார் augustin@malaysiaairlines.com
கே
: Wallpaper என்றால் என்ன? அதை எப்படி கணினியில் மாற்றுவது?

ப: உங்கள் கணினியைத் திறந்ததும் திரையில் ஓர் அழகான படம் வரும். அதற்குப் பெயர் தான் Wallpaper. தமிழில் திரைக் காட்சி என்று சொல்லலாம். உஙளுக்குப் பிடித்தமான ஒரு படத்தைத் தேர்வு செய்து Right Faw-li-FalClick >> Set as Desktop Background என்று சொடுக்கி விடுங்கள்.

அந்தப் படம் கணினித் திரையில் காட்சி அளிக்கும். பார்த்து ரசியுங்கள். ஏடா கூடாமான படங்களைப் போட்டு பார்ப்பவர் முகம் சுளிக்க வைக்காமல் இருந்தால் சரி! நீங்கள் எனக்கு நிறைய, அபூர்வமான படங்களை அனுப்பி வைக்கிறீர்கள். மிகவும் நன்றி.

இராமக்கிருஷ்ணன் ராகி raamanat10@gmail.com
கே
: Corel Draw என்பது ஒரு பெரிய வரைகலைச் செயலி என்று சொல்கிறார்களே, இது எந்த அளவுக்கு உண்மை?

ப: உண்மைதான் எழுத்தாளரே! கணினி உலகில் முடி சூடா மன்னனாக விளங்கும் மாபெரும் வரைகலைச் செயலி இந்த Corel Draw. வரைகலைச் செயலி என்றால் Graphic Interface என்று அர்த்தம். விண்டோஸல் Paint எனும் ஒரு செயலி இருக்கிறது. பார்த்திருப்பீர்கள். படம் வரையப் பயன்படுத்துகிறோம்.

அது மாதிரிதான் இந்த Corel Draw. படங்களை வெட்டி, சின்னதைப் பெரிதாக்கி, அழகுப் படுத்த இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்கள். cdrx4retail-150

இதைப் படித்துக் கொள்ள கண்டிப்பாக ஓர் ஆசிரியரின் உதவி தேவை. சொந்தமாகப் படித்துக் கொள்வது சற்று சிரமம். இப்போது Corel Draw-14 வந்துவிட்டது. இதன் விலை ஏறக்குறைய RM13,000. என்ன யோசிக்கிறீர்கள். உண்மைதான். இந்த ஒரு வரைகலைச் செயலியை வாங்குவதற்கும் பத்துக் கணினிகளை வாங்குவதற்கும் சமம்.

ரவீந்திரன் குமார் ranggiboys@live.com.my
கே
: Corel Drawவை உங்களுக்கு இயக்கத் தெரியுமா. ஐயா, எனக்குச் சொல்லித் தர முடியுமா?

ப: தாராளமாகச் சொல்லித் தரலாம். முழுமையாகப் படித்து முடிக்க ஆறு மாதங்கள் பிடிக்கும். வழிகாட்டி நூல்கள் உள்ளன. இருந்தாலும் ஒரு கணினி ஆசிரியரின் உதவி இல்லாமல் இதைப் படித்துக் கொள்வது ரொம்பவும் கஷ்டம். உங்களுக்குப் படித்துக் கொடுப்பதில் மகிழ்ச்சி.

இவர்கள் என் மாணவிகள். என்னிடம் Corel Draw படிக்கிறார்கள்.ஒரு வகுப்பு தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். குறைந்த பட்சம் ஒரு வாரம் பிடிக்கும். எதை மறந்தாலும் ஆசிரியருக்குச் சம்பளத்தைக் கொடுப்பதை மட்டும் மறக்கக் கூடாது. சரியா! உங்கள் வசதி எப்படி.

அப்துல் கலாம் rahman1961@yahoo.com
கே
: என்னுடைய கணினித் திரையில் My Computer, My Documents எனும் அடையாளச் சின்னங்கள் காணாமல் போய்விட்டன. திரும்பி வரவழைக்க என்ன செய்ய வேண்டும்?

ப: Start எனும் பட்டனைச் சொடுக்கினால் வலது புறமாகக் கணினியில் உள்ள எல்லா பயன்பாட்டு அம்சங்களும் தெரியும். அதில் My Computer, My Documents என்பதை வலது சொடுக்கு செய்து Show on Desktop என்பதை முடுக்கி விடுங்கள். உங்கள் பிரச்னை தீர்ந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: