ksmuthukrishnan எழுதியவை | 09/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 15

ஜெசினா ஞானபிரகாசம் g.a.jessina@gmail.com
கே
: சார், நான் Blog எனும் வலைப்பதிவை என் பெயரில் தொடங்கி, என்னுடைய குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறிய வரலாறு எழுதலாம் என்று நினைக்கிறேன். எப்படி என்ன செய்வது என்று தெரியவில்லை?

ப: நீங்கள் தமிழிலேயே எழுதலாம். http://www.blogger.com/home எனும் முகவரிக்குப் போய் உங்களுடைய தகவல்களைக் கொடுத்து பதிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்று ஓர் அகப் பக்கத்தைத் திறந்து கொடுப்பார்கள். அதில் உங்களுடைய குடும்ப வரலாறு, படங்கள் போன்றவறை இணைக்கலாம். உலகில் உள்ள எல்லாரும் படிப்பார்கள். மறக்காமல் RSS Feed எனும் பகுதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய அடுத்த கேள்விக்கான பதில். படங்களை வெட்டி ஒட்டுவதற்கு ஒரு செயலி தேவை. விண்டோஸ் செயலியில் உள்ள Paint எனும் செயலியைப் பயன்படுத்தலாம். இதைத்தவிர, http://www.opensource.org/ எனும் முகவரிக்குப் போய் இலவச வரைபடச் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உலகக் கணினி வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இணையத்தளம் அது.

இன்னும் ஒன்று. தமிழில் எழுத வேண்டும் என்றால் http://software.nhm.in/writer.html எனும் முகவரியில் தமிழ் தட்டச்சு செயலி இலவசமாகக் கிடைக்கும். எப்படி இயக்குவது என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார்கள். சந்தேகம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ஒரு விளக்க அறிக்கை தயாரித்திருக்கிறேன். சுங்கைப்பட்டாணியில் உள்ள ஜனனிப் பதிப்பக உரிமையாளர், எழுத்தாளர் திரு. இராமக்கிருஷ்ணனுக்காகத் தயாரிக்கப்பட்டது. அனுப்பி வைக்கிறேன்.

கிருஷ்ண மூர்த்தி krishnacsb@gmail.com
கே
: பொது கழிவறைகளில் இரகசிய காமிரா பொருத்தப் பட்டிருந்தால், நாம் வைத்திருக்கும் கைப்பேசியின் மூலமாகக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல் கிறார்களே, முடியுமா சார்

ப: முடியும். கழிவறைக்குள் நுழைந்ததும் உங்கள் கைப்பேசியின் மூலமாக யாரையாவது ஒருவரை அழையுங்கள். அழைப்பு கிடைத்தால் இரகசிய காமிரா இல்லை என்று அர்த்தம். அழைக்க முடியவில்லை என்றால் பிரச்னை மறைந்து இருக்கிறது. அதற்கு முன்னர், கழிப்பறைக்குள் செல்லும் முன் உங்கள் கைப்பேசியின் மூலமாக அழைப்பு செய்ய முடிகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அழைப்பு கிடைக்கவில்லை என்றால் பேசாமல் வந்து விடுங்கள். சந்தேகப்பட்டு ‘சுப்பிரமணிபுரம்’ கணக்கில் இறங்கி, சண்டை சச்சரவுக்குப் போய் விட வேண்டாம். பணிவான கோரிக்கை. மற்ற மற்ற காரணங்களும் இருக்கலாம் இல்லையா.

ராசி கணேஷ் shitra95@hotmail.com
கே
: நான் விண்டோஸ் 98 பயன்படுத்துகிறேன். என்னுடைய Internet Explorer எனும் இணைய உலவியைப் பயன்படுத்தி விடியோ படங்களைத் திறந்தால் தடை செய்யப் படுகிறது. ஏன்?

ப: இதற்கு காரணம் உங்களுடைய Firewall  எனும் கணினிப் பாது காப்பு அரண். Start > Control Panel > Windows Firewall > Off என்பதைச் சொடுக்கி விடுங்கள். முடியும் என்று நினைக்கிறேன். விடியோ படங்களைப் பார்த்த பிறகு மறுபடியும் அதே இடத்திற்குப் போய் Off என்பதை On  என்று மாற்றி விடுங்கள்.

தனžலன் žலன் thanaseelan101@yahoo.com
கே
: ஐயா, நான் 1.25GB RAM பயன்படுத்துகிறேன். ஆனால், கணினியில் 704 MB என்று மட்டும் காட்டுகிறது. ஏன்?

ப: RAM என்பதை தற்காலிக நினைவி என்கிறோம். SD RAM, DDR1, DDR2, DDR3, எனும் வகைகள் உள்ளன. இப்பொழுதுள்ள நவீனக் கணினிகள் DDR3 ரக நினைவிகளைப் பயன்படுத்துகின்றன. இவை கணினியின் உள்ளே செருகப்பட்டிருக்கும். கணினியைத் தொடக்கியதும் எல்லா செய்திகளும் விவரங்களும் இந்த நினைவியில்தான் தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப்படும்.

கணினியின் உயிர்ப் பொருட்களில் இதுவும் ஒன்று. சரி. உங்கள் பிரச்னைக்கு வருகிறேன். 1.25GB RAM என்பதில் தப்பு இருப்பதாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட நினைவிகள் புழக்கத்தில் இல்லை. என் கணக்குப்படி நீங்கள் மூன்று அல்லது நான்கு நினவிகளை ஒரே சமயத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அதில் 512MB நினைவியும் 256MB நினைவியும் தான் வேலை செய்கின்றன. மற்றவை வேலை செய்யவில்லை. அதற்கு காரணம் அவற்றின் Bus Speed வேக அளவு. ஒன்றுக்கும் மேற்பட்ட நினவிகள் இருந்தால், எதன் வேக அளவு குறைவாக இருக்கிறதோ அதைத் தான் கணினி ஏற்றுக் கொள்ளும். வேக அளவு கூடுதலாக உள்ளதை ஒதுக்கி விடும். அந்த வகையில் உங்கள் கணினியில் வேக அளவு குறைவான நினைவிகளே வேலை செய்து கொண்டிருக்கின்றன. கணினி பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் சென்று குறையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு செய்தி. ஈப்போ, புந்தோங்கில் வாழும் நண்பர்கள் யாருக்காவது உடனடியாகக் கணினி பழுது பார்க்க வேண்டும் என்றால் கீழே காணும் என்னுடைய கைப்பேசிக்கு அழைக்கலாம். என்னிடம் இந்திய மாணவர்கள் சிலர் பயிற்சி பெறு கிறார்கள். பகுதி நேரத்தில் பழுது பார்க்கும் சேவையும் செய்கிறார்கள். வழக்கமான கட்டணம் உண்டு. அவர்களுக்கும் ஒரு வருமானம் கிடைத்த மாதிரியும் இருக்கும் இல்லையா.

வாணி கோகிலா wani2313@yahoo.com
கே
: கணினியின் இயக்கத்தில் பிழைகள் ஏற்படுமா?

ப: கண்டிப்பாக. மனிதன் தயாரித்த பொருள் அல்லவா. அதனால், மனிதர்களைப் போல அதற்கும் சமயங்களில் சளி பிடிக்கும். தும்மல் வரும். காய்ச்சலும் அடிக்கும். ஆக, My Computer > Right Click > Properties > C drive > Tools > Error-Checking > Check Now என்பதைச் சொடுக்கி விடுங்கள். உங்கள் கணினியின் பிழைகள் திருத்தப்படும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: