ksmuthukrishnan எழுதியவை | 09/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 14

வெங்கடாசலம் <vengada.salam@yahoo.com>
கே: என் உறவினரின் மகள் ஜப்பானுக்குப் படிக்கப் போகிறாள். அவரிடம் Yahoo மின்னஞ்சல் இருக்கிறது. அவர் அங்கே போனால், அங்கிருந்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா? அவருடைய மின்னஞ்சலை இங்கே மலேசியாவில் பதிவு செய்தார்.

ப: மின்னஞ்சல் என்றால் என்ன? மின்காந்த அலைகளில் அனுப்பப்படும் அஞ்சல். கடிதங்களைத் தபால் நிலையங்களிலிருந்து அனுப்புகிறோம். அதே போல மின்னஞ்சல்களைக் கணினிகள் மூலமாக அனுப்புகிறோம். அவ்வளவுதான். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மின்னஞ்சல்கள் வந்து சேரும். வானத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். அங்கேயும் மின்னஞ்சல் கிடைக்கும். ராக்கெட்டில் சந்திரனுக்குப் போகிறோம். அங்கேயும் கிடைக்கும். ஒரே ஒரு வினாடிதான்.

உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் மின்னஞ்சல் கிடைத்துவிடும். உங்கள் உறவினரின் மகள் ஜப்பானுக்குப் படிக்கப் போகிறார். வாழ்த்துகள். அவர் பழைய மின்னஞ்சலைப் பயன் படுத்தலாம்.

புதிதாக மின்னஞ்சல் வேண்டும் என்றால் பல இடங்களில் இலவசமாகக் கொடுக் கிறார்கள். http://www.google.com.my எனும் முகவரிக்குப் போய் GMail என்பதைச் சொ டுக்கி விடுங்கள். Create New Account என்பதைத் தட்டி, உங்கள் விவரங்களைக் கொ டுத்து பதிந்து கொள்ளுங்கள். அப்புறம் மின்னஞ்சல்கள் பறந்து வரும்.

ராஜு முரளி <raju_pollathavan@yahoo.com>
கே: கணினியும் நீங்களும் கேள்வி பதில் அங்கத்தில் தயவு செய்து இன்னும் கூடுதலாகக் கேள்விகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ள பகுதியாக இருக்கிறது.

ப: கருத்திற்கு நன்றி. இப்போது இருக்கும் நிலைமையே சரி. போதும் என்று நினைக்கிறேன். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. ஒரு கோப்பை தேநீருக்கு ஒரு கரண்டி žனி போட்டால் சரி. தேநீர் தேநீராக இருக்கும். சந்தோஷமாகக் குடிக்கலாம். žனி இருக்கிறதே என்று நாலைந்து கரண்டி அள்ளிப் போட்டு கலக்கினால் அப்புறம் தேநீர் என்னவாகும். அந்த மாதிரிதான் இங்கேயும் நிலைமை. எதிலும் ஓர் அளவு இருக்க வேண்டும் இல்லையா.

எஸ்.பி.பாலக்கிருஷ்ணன்  oum9100@yahoo.com.sg
கே: உலகமே புகழும் Hotmail எனும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கியவர் ஓர் இந்தியர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?

ப: உண்மை. அவருடைய பெயர் சபிர் பாதியா. வயது 40. இவர் ஓர் கணினித் தொ ழில்நுட்பாளர். விளையாட்டுத் தனமாக Hotmail எனும் மின்னஞ்சல் சேவையைப் பங்களூரிலிருந்து இலவசமாகத் தொடங்கினார். பற்றிக் கொண்டது. உலகமே ஒரு கட்டத்தில் ஹாட் மெயில் எனும் வாசகத்திற்குக் கட்டுப்பட்டும் போனது.

1990களில் நடந்த உண்மை. கணினி பயன்படுத்திய அனைவருமே அலை அலையாய் ஹாட் மெயி லுக்குப் படை எடுத்தார்கள். ஹாட் மெயில் மின்னஞ்சல் வைத்திருந்தால் ஒரு கௌரவமாகக் கூட நினைத்தார்கள். என்னையும் சேர்த்துதான். மைக்ராசாப்ட் நிறுவனத்தின் பெரிய தலை பில்கேட்ஸ் பார்த்தார். அவருக்கும் ஒரு மயக்கம்.

உடனே இந்தியாவுக்கு இரவோடு இரவாகப் பறந்து வந்தார். இளைஞர் சபிர் பாதியாவைப் பார்த்தார். என்ன நடந்தது ஏது நடந்தது என்று தெரியவில்லை. ஹாட் மெயில் மின்னஞ்சல் சேவை கைமாறியது. மைக்ராசாப்ட் நிறுவனம் வாங்கிக் கொண்டது. என்ன விலை தெரியுமா. மயக்கம் போட்டு விழ வேண்டாம்.

140 கோடி மலேசிய ரிங்கிட். அதாவது, நம்முடைய பினாங்கு பாலம் இருக்கிறதே. அந்த மாதிரி மூன்று பாலங்களைக் கட்டலாம். அவ்வளவு பணம். 27 வயதில் சபிர் பாதியா உலகப் பணக்காரர் ஆனார். மிக மிக ஆடம்பரமான வாழ்க்கை. நண்பர்களுக்கு வாரி வாரி இறைத்தார். லங்காவித் தீவிற்கு வந்தார். உலகமே வியக்கும் வண்ணம் தானியா சர்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

கொஞ்ச நாளில் பணம் கரைந்தது. Arzoo.com எனும் கம்பெனியைத் தொடங்கினார். அதுவும் அறுந்து கொண்டது. இருப்பினும்,  இருக்கிற பணத்தை மனைவி பத்திரப் படுத்தி வைத்ததால் இப்போது கொஞ்சம் நல்லபடியாக இருக்கிறார். அவருடைய பணைத்தைக் கரைத்தது எல்லாம் அவர்களுடைய நண்பர்கள்.

ஆக, இவருடைய கதையிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம் இருக்கும் போது பக்கத்தில் இருப்பவன் எல்லாம் மாமன், மச்சான் ஆவான். கஷ்டப் படும்போது துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்கிற மாதிரி காணாமல் போய்விடுவான்கள். கடைசி வரை இருக்கப் போவது நம்முடைய மனைவி மக்கள்தான். அதை மறக்காமல் இருந்தால் சரி! புத்திசாலிக்கு மனைவிதான் தைரியசாலி!

மாலா விஸ்வநாதன் <shiwani2572@gmail.com>
கே: நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலகளை எப்படி அனுப்புகிறீர்கள். தபால் மூலமாகவா அல்லது மின்னஞ்சல் மூலமாகவா?

ப: என்ன இது. வருகிற கேள்விகள் எல்லாம் மின்னஞ்சல் சம்பந்தமாக இருக்கின்றன. இந்தக் கேள்விக்கான பதிலை எழுதும் போது காலை 8.30மணி. 26ஆம் தேதி மே மாதம் 2009. மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு ஆசிரியருக்குத் தொலைபேசி மூலமாகத் தெ ரிவித்து விடுவேன். அவ்வளவுதான். மற்ற வேலைகளை ஆசிரியர் பார்த்துக் கொள்வார். நம்முடைய மலேசிய நண்பன் பத்திரிகை மிக நவீனமாகிவிட்டது என்பதற்காக இதைச் சொல்ல வருகிறேன். உலகம் கணினி மயமாகிக் கொண்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் எதிர்கால உலகம் நம்மை உதறித் தள்ளி மறந்துவிடும்.

(வாசகர்களின் அவசரக் கணினிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகத்தான் கைப்பேசி எண்களைக் கொடுக்கிறோம். சென்ற வாரம் ஒரு பெண்மணி ஜொகூர் பாருவில் இருந்து அழைத்தார். ‘சோறு இல்லாமல் கஞ்சி குடிக்கிறோம். காசு இல்லாமல் கருவாடு தின்கிறோம். கணினி வாங்க காசு இல்லை’ என்றார். என்ன பதில் சொல் வது. மலேசியாவில் சோறு சாப்பிட வழி இல்லை என்றால் என்ன அர்த்தம். ஆக, கணினி, கைப்பேசி போன்றவை மனிதனுக்கு தெய்வம் கொடுத்த வரப்பிரசாதங்கள். நல்லதுக்கு நியாயமாகப் பயன்படுத்துவோம்.)

மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் மின்னஞ்சல் முகவரி:
ksmuthukrishnan@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: