ksmuthukrishnan எழுதியவை | 09/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 13

neelan_t@yahoo.com.my
கே: எதிர்காலத்தில் கணினியைப் பற்றிய உங்கள் கருத்து?

ப: ஓர் அடி அகலம் ஓர் அடி நீளம் ஓர் அடி உயரம். உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தைக் உங்கள் முன் கொண்டு வருகிறது. உலகத்தைப் பார்க்க வைக்கிறது. ரசிக்க வைக்கிறது.  ஒரே வினாடியில் ஐஸ்வர்யா ராயை உங்கள் முன் கொண்டு வந்து பேச வைக்கிறது. அவர் போட்டிருக்கும் நறுமணம் Perfume நாசியைத் துளைக்க வைக்கிறது.

மலேசியாவில் இருந்தவாறு அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டின் கதவைத் திறக்க வைக்கிறது. அந்த வீட்டின் விளக்குகளைப் போட வைக்கிறது.  ஊஞ்சலை ஆட்ட வைக்கிறது.

போகப் போக கணினிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு சங்கத்தை உருவாக்கிக் கொள்ளும். உறவாடிக் கொள்ளும். உரிமைகளைக் கேட்கும். மீறினால் சண்டைக்கு நிற்கும். கதவடைப்பு செய்யும். மனிதன் தலையில் கையை வைத்து ஒப்பாரி வைக்கவும் செய்யும். நடக்கும். கண்டிப்பாக நடக்கும். இது ஒரு தீர்க்கதரிசனம்.

mala visvanathan <shiwani2572@gmail.com>
கே: மலேசியாவில் தமிழ் Bloggers களின் முன்னோடி யார்?

ப: குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், இப்போதைக்கு பேரா, கோப்பேங் விக்னேஸ்வரன் தான் அந்தப் பெருமைக்கு உரியவர் என்பது என் தனிப்பட்டக் கருத்து. தமிழர்கள் அனைவரும் தமிழைப் படிக்க வேண்டும். மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகள் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்ட வேண்டும் எனும் சமுதாயப் பிடிப்பு உணர்வுடன் எழுதி வருகிறார்.

நேரில் பார்த்தால் இந்தப் பையனா என்று நினைக்கத் தோன்றும். சின்ன வயது. தெளிவான சிந்தனை. மென்மையான பேச்சு. காரமான எழுத்து. http://vaazkaipayanam.blogspot.com எனும் வலைப்பதிவில் எழுதி வருகிறார்.

இவருடைய பழைய மன உலைச்சல்களின் தாக்கங்களைப் பெரிது படுத்தக் கூடாது. மலேசியாவில் இவரைப் போல நிறைய இலைமறை காய்கள் உள்ளன. அவர்களை அடையாளம் காண வேண்டும். வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். புதிய பரிமாணத்தைக் கொடுக்க வேண்டும். மலேசியத் தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

வனஜா,  vanajahm@yahoo.com
கே: மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எங்களுடைய கணினியைத் தர உயர்வு (Upgrade) செய்வதாகச் சொல்லி ஒருவர் வாங்கிச் சென்றார். விண்டோஸ் 2000 லிருந்து விண்டோஸ் XPக்கு தரம் உயர்வு செய்யப்பட்டது. இப்போது கணினி பிரச்னை செய்கிறது. “this copy of windows did not pass genuine window validation” எனும் எச்சரிக்கை வருகிறது. கேட்ட பணத்தைக் கொடுத்தும் எங்களுக்குப் பிரச்னை. ஐயா உதவி செய்யுங்கள்.

ப: சில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வாடிக்கையாளர்களை இளிச்சவாயர்களாக நினைப்பது ஒரு பாவச் செயல். ஓர் அசல் விண்டோஸ் XPயை RM220க்குள் வாங்கலாம்.

அப்படித்தான் உங்களுக்கு அசல் செயலியைப் பதித்துக் கொடுத்திருக்க வேண்டும். சில கடைக்காரர்கள் ஓர் அசல் செயலியை வைத்துக் கொண்டு, கள்ளத்தனமாக பல கள்ளச் செயலிகளை நகல் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் ஒரு கள்ளச் செயலியின் விலை RM1 தான். அதில் ஒன்றை உங்களுக்குப் பதித்துக் கொடுப்பார்கள். ஆக, கடைக்காரருக்கு RM220 லாபம். அவர் பதித்துக் கொடுத்த கள்ளச் செயலியுடன் கணினியை வீட்டுக்கு எடுத்து வந்து வருவீர்கள்.

சந்தோஷமாகப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் இணையத்தில் உலா வரும் போது, உங்கள் கணினி அமெரிக்காவிலுள்ள மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியாது.

மைக்ராசாப்ட் நிறுவனத்தில் உள்ள தலைமைக் கணினிகள் உங்கள் கணினியின் உண்மை நிலவரத்தைக் கண்டறியும். உங்களுடைய விண்டோஸ் அசலானதாக இருந்தால் சந்தோஷமாக உறவாடும். புதிய புதிய மென்பொருள்களைப் பதித்துக் கொடுக்கும். போலியானதாக இருந்தால் காரித் துப்பிவிடும். “this copy of windows did not pass genuine window validation” எனும் எச்சரிக்கையை உங்கள் கணினிக்குள் பதித்து எரிச்சலை உண்டு பண்ணும்.

சரி. இந்த மாதிரி நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து வருகின்றன. கடைக்காரரிடம் விவரத்தைச் சொல்லுங்கள். பணம் கட்டியதற்கான ரžது உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் ஏமாற்றியது உண்மை என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அருகாமையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்யுங்கள்.

அப்புறம் http://www.mipc.gov.my/ எனும் முகவரிக்குப் போய் ஒரு புகார் செய்யுங்கள். அவ்வளவுதான். கடைக்காரரைத் தேடி சட்ட அமலாக்க அதிகாரிகள் வருவார்கள். செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்வார்கள். அப்புறம் வருமான வரி அதிகாரிகள் வருவார்கள். அவர்களும் அவர்கள் வேலைகளைச் செய்வார்கள்.

கடலிலிருந்து உப்பை எடுக்கலாம். ஆனால், உப்புக் கிண்ணத்தில் இருந்து கடலைத் தேடக் கூடாது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: