ksmuthukrishnan எழுதியவை | 08/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 3

D34223-001-unitஎல்.மாதவன், கிரிக், பேராக்
கே
: கணினி இயங்கிக் கொண்டிருக்கும் போது அது எவ்வளவு வெப்பத்தில் இருக்கிறது என்பதைக் கண்காணிக்க முடியுமா?

ப:  இப்பொழுது வரும் கணினிகளில்  அந்தச் செயல்பாடுகள் உள்ளன. கணினியில் அளவுக்கு மீறி சூடு ஏறியதும் உள்ளே இருக்கும் வெப்பக் கண்காணிப்பு நிரலி எச்சரிக்கை ஒலியை எழுப்பும். நீங்கள் உடனடியாக நிறுத்தாவிட்டால் அதுவே கணினியை நிறுத்திவிடும். இந்த நிரலி உங்கள் கணினியில் பதிக்கப்படவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். http://tiny-url.com/4z7ks7 எனும் இணையத்தளத்தில் இலவசமாகத் தாய்ப்பலகை கண்காணிப்பு நிரலியைக் கொடுக்கிறார்கள். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

burning-computer2-150x150திருமதி. ஜானகி ஜெயராம், சுங்கை பூலோ
கே
: கணினியில் பொருத்தப்பட்டிருக்கும் சில பாகங்களை Overclocking  செய்ய முடியும் என்கிறார்களே. அது எப்படி?

ப:  நான்கு பேரை ஏற்றிச் செல்லும் காரில் ஆறு பேரை ஏற்றிச் செல்வதற்கு ஒப்பாகும். அது ஒரு விஷப்பரீட்ஷை. நீங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் தயவு செய்து எதையும் செய்யாதீர்கள். கணினியின் செயலர், நினைவி, Graphic Card எனப்படும் வரைபட அட்டை போன்றவை இந்த வேகத்தில்தான் செயல்பட வேண்டும் என்று அந்தச் சாதனங்களைத் தயாரித்தவர்கள் வரையறுத்து வைத்திருப்பார்கள்.

இருந்தாலும் அவற்றை இன்னும் கூடுதல் வேகத்தில் செயல்படுத்த முடியும். அதைத்தான் overclocking என்று சொல்கிறார்கள். கணினியை முடக்கிவிட்டதும் BIOSன் உள்ளே   சென்று இந்தக் கூடுதல் திறனைச் செய்யலாம். அப்படியே கூடுதல் வேகத்தில் செயல்பட வைத்தாலும் அதற்கான பாதுகாப்பு முறைகளை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூடுதலான குளிர்ச்சியைக் கொடுக்க சிறு காற்றாடிகளைக் மேலும் கூடுதலாகப் பொருத்த வேண்டும். அடுத்து வெப்பக் கண்காணிப்பு நிரலிகளைப் பதிக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. தப்பித் தவறி ஒரு காற்றாடி சுற்றாவிட்டாலும் உங்கள் கணினி மொத்தமாகக் கெட்டுப் போகும். உங்கள் வசதி எப்படி?

S457-1015-smallகுமாரி.கல்யாணி சண்முகம், களும்பாங், தஞ்சோங் மாலிம்
கே
: கணினிக்குள் இருக்கும் காற்றாடிகளைச் சுத்தம் செய்ய வேண்டுமா?

ப:  கணினிக்குள் (Processor) செயலர் காற்றாடி, (Graphic Card) வரைபட அட்டைக் காற்றாடி, (Chassis Fan) பெட்டகக் காற்றாடி என்று காற்றாடிகள் இருக்கும். இவற்றை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது.

லேசான ஈரப்பசையுள்ள பஞ்சுத் துணியைக் கொண்டு சுழல் பட்டைகளில் படர்ந்திருக்கும்    தூசுகளைத் துடைக்கலாம். அதற்கு முன் கணினிக்குள் மின்சாரம் முற்றாக நிறுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

touchscreen-eதா.சிவராஜன், பொக்கோ அசாம், தைப்பிங்
கே
: எதிர்காலத்தில் கணினியைப் பயன்படுத்த Key Board தேவைப்படாது என்று கேள்வி பட்டேன். எந்த அளவுக்கு உண்மை?

ப: ஏன் எதிர்காலம் என்று தொலை தூரம் போய்விட்டீர்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அச்சுப்பலகை தேவைப்படாத கணினிகள் வரப் போகின்றன. கணினித் திரையில் விரலை வைத்து செயல்படுவது; ஒலிவாங்கியின் மூலமாக நம் குரலைக் கேட்டு அதன்படி கணினி இயங்குவது போன்ற விந்தைகள் எல்லாம் நடக்கப் போகின்றன. பொறுத்திருந்து பாருங்கள்!

பெ.சின்னசாமி, மெங்ளம்பு, பேராக்
கே
: கைத்தொலைபேசிகளுக்கும் virus எனும் அழிவிகள் வந்துவிட்டதாகச் சொல் கிறார்கள். அப்படி என்ன அழிவிகள்?

கைத்தொலைபேசி அழிவிகள்ப: Skulls, Velasco, Commwarrior போன்ற அழிவிகள், சிம்பியான் அடிப்படைச் செயலி யைப் பயன்படுத்தும் நோக்கியா கைத்தொலைபேசிகளைத் தாக்குகின்றன. இணையம் மூலமாக ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யும் போது இந்த அழிவிகள் தொற்றிக்   கொள்கின்றன.

இதற்கும் AntiVirus எனும் தடுப்பு நிரலிகள் வந்துவிட்டன. http://www.mobilephoneviruses.com எனும் இணையத்தளத்திற்குப் போய் மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் இப்போது கணினியைத் தாக்கும் அழிவிகள் 350,000. கைத்தொலைபேசிகளைத் தாக்கும் அழிவிகள் 200. பச்சைக் கிளிகளாய்ப் பறந்து கொண்டிருக்கின்றன.

சிவ. சரவணன், தாமான் மாஸ், கம்பார்.
கே
: இலவசமாகத் தடுப்பு நிரலிகள் எனும் Anti Virus கிடைக்குமா?

AVGப:  AVG எனும் தடுப்பு நிரலிக்கு http://www.download எனும் இணையத்தளம். Avast!4 எனும் தடுப்பு நிரலிக்கு http://www.avast.com/eng/download-avast-home.html எனும் இணையத்தளம். Nanoscan எனும் தடுப்பு நிரலிக்கு http://www.nanoscan.com எனும் இணையத்தளம். ThreatFire 3 எனும் தடுப்பு நிரலிக்கு http://www.threatfire.com எனும் இணையத்தளம். இவை அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் நிரலிகள்.

லெ.மதியழகன், தாமான் மாஸ், கம்பார்.
கே
: நிரலி என்பதற்கும் செயலி என்பதற்கும் என்ன வித்தியாசம். சற்று குழப்பமாக இருக்கிறது?

ப: கணினியைச் செயல்படுத்த கட்டளைத் தொகுப்புகள் தேவை. அவற்றைக் கணினி யின் தட்டகத்தில் பதிக்க வேண்டும். இந்தக் கட்டளைத் தொகுதிகளுக்கு Software என்று பெயர். செயலியைச் சிலர் மென்பொருள் என்கிறார்கள். கணினி எழுத்தர்கள் முதலில் செயலியைத்தான் எழுதுவார்கள்.

fulllogo_webஅதன் பின்னர்தான் அந்தச்    செயலிக்கு ஏற்றவாறு நிரலியை எழுதிக் கொடுப்பார்கள். Program என்பதை நிரலி என்கிறோம். Murasu Anjal, Paint, Notpad, Windows Media Player போன்றவை எல்லாம் நிரலிகள்.

கணினியும் நீங்களும் பகுதிக்கு கணினித்துறை தொடர்புடைய கேள்விகளை வாசகர் களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் பயனளிக்கும் கேள்விகளுக்கு முதன்மை வழங்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி: கணினியும் நீங்களும், மலேசிய நண்பன், 544-3, பத்து காம்பளக்ஸ் off ஜாலான் ஈப்போ 3 1/4, 51200 கோலாலம்பூர். மின்னஞ்சலில் அனுப்பலாம். e-mail: ksmuthukrishnan@gmail.com. அனைவருக்கும் இந்தப் பகுதி நன்மை பயக்கும் என்று நம்புகிறோம். -ஆசிரியர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: