ksmuthukrishnan எழுதியவை | 08/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 11

கணினிக் களஞ்சியம்

Accelarated Graphics Port (AGP) – முடுக்கு வரைகலைத் துறை
Access Denied –
அணுகல் மறுப்பு
Account –
கணக்கு வைப்பு
Acrobat –
அடோப் நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரு வணிக மென்பொருள்.
Active X –
வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயல்  -தொழில் நுட்பங்களின் கூட்டு.
Adaptive Interface –
இயைபு இடைமுகம்
Add-on –
கூட்டு உறுப்பு
Add Remove Programmes –
நிரல்கள் சேர்/அகற்று
Address Memory –
நினைவக முகவரி
Advanced Digital Network –
உயர்நிலை இலக்க முறை பிணையம்
Alarm Beep –
எச்சரிக்கை ஒலி
Alignment –
ஓரச் சீர்மை
Algebra –
இயல் கணிதம்
Allocation –
ஒதுக்கீடு
Alphabet –
அகர வரிசை
Alt Key –
மாற்று விசை
Analog Device –
ஒத்திசைக் கருவி அல்லது தொடர்முறைச் சாதனம்

பெல்லோ சான், forbidden0live@gmail.com
கே: என்னுடைய கணினியில் நிறைய
Virus எனும் அழிவிகள் நுழைந்து விட்டதாக நினைக்கிறேன். கணினி மெதுவாக வேலை செய்கிறது. கணினியை Format சுத்திகரிப்பு செய்ய வேண்டுமா?

ப: பெல்லோ சான் என்கிற உங்கள் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சரி. கணினி மெதுவாக வேலை செய்தால் வைரஸ்கள் உங்கள் கணினிக்குள் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கலாம் என்று சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

ஆனால், வைரஸ்களின் தாக்குதலினால்தான் ஒரு கணினி மெதுவாக வேலை செய்கிறது என்கிற ஒரு பொத்தாம் பொது முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. மற்ற மற்ற காரணங்களும் இருக்கின்றன. 

அதற்காக சுத்திகரிப்பு செய்துதான் ஆக வேண்டும் எனும் அவசியம் இல்லை. கணினியின் உயிர்ப் பொருள்களில் ஒன்றான Hard Disk எனும் நிலை வட்டை அடிக்கடி சுத்திகரிப்பு செய்யக் கூடாது. அதன் ஆயுள் காலத்தில் ஒரு பத்து தடவை வரை Format எனும் சுத்திகரிப்பு செய்யலாம். அதற்கு மேல் போகக்கூடாது.

அப்புறம் அதன் செயல் திறன் குறையும். இல்லாத பிரச்னைகளைக் கொடுக்கும். அவசியம் இல்லாமல் சுத்திகரிப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் NTFS எனும் கோப்பு முறையில் செய்யுங்கள். FAT 32 முறையில் செய்ய வேண்டாம்.

உங்கள் கணினி மெதுவாக வேலை செய்வதாகச் சொல்கிறீர்கள். தேவை இல்லாத ஆவணங்கள், விளையாட்டு நிரலிகள், படங்கள், பாடல்கள், திரைக் காட்சிகள் இருந்தால், முடிந்த வரையில் குறைத்து விடுங்கள்.

ஒரு சிலரின் கணினிகளைப் பார்த்திருக்கிறேன். உலகத்திலுள்ள படங்கள், பாடல்கள் என்று எல்லாம் இருக்கும். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, பார்க்கிறார்களோ இல்லையோ அது முக்கியம் இல்லை. ஆனால், இருக்க வேண்டும்.

மற்றவர்கள் பார்த்து மெச்சிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது பெரிய தப்பு. குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைத் தொட்டியாகக் கணிணினியை மாற்றக் கூடாது. கணினி மனுக்குலத்திற்கு கிடைத்த ஓர் அரிய பொக்கிஷம். அதைத் தெய்வமாக நினைத்து ஆராதனை செய்ய வேண்டும். ஆலிங்கனம் செய்யக்கூடாது.

Raju Murali <raju_pollathavan@yahoo.com>
கே: கணினித் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க என்ன காரணம்
? இப்பொழுது உள்ள சிறுவர்கள் சின்ன வயதிலேயே கணினியை இயக்கக் கற்றுக் கொள்கிறார்களே. பெரியவர்களால் அப்படி முடியவில்லை. ஏன்?

ப: உங்களுடைய முதல் கேள்விக்கு வருகிறேன். தமிழர்கள் என்று தனித்துச் சொல்வதைக் காட்டிலும் திராவிடர்கள் என்று சொல்வதே சரி. தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எல்லாம் திராவிடர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடர் என்ற ஒரே ஓர் இனம் மட்டும் தான் இருந்தது. காலத்தின் தாக்கத்தால், ஆரியர்களின் ஆளாண்மையால் அந்த இனம் பிரிந்து இப்படி நான்காகப் பிரிந்து போனது.

ஆனால், திராவிடர்களின் பாரம்பரிய கணிதப் புலமை மட்டும் குறையவில்லை. அது இயற்கை அள்ளிக் கொடுத்த அமுதசுரபி. உலகத்திலேயே கணினித் துறையில் சிறந்தவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள்தான் இந்தியர்கள். இப்படி நான் சொல்லவில்லை. உலகத்திற்கே அது தெரியும். இல்லை என்றால் அப்பேர்ப்பட்ட பில் கேட்ஸ் ஏன் இந்தியாவிற்கு வர வேண்டும். 26,000 பேரை வேலைக்குச் சேர்க்க வேண்டும். அதில் 21,000 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சம்பளத்தை இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க வேண்டும்.

சரி. உங்களுடைய அடுத்த கேள்விக்கு வருகிறேன். கற்றுக்கொள்ளும் ஆற்றல் வயது ஆக ஆகக் குறையும் என்பது உண்மைதான். ஆனால், அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஓர் ஆர்வம் இருக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு பிடிவாத குணம் இருக்க வேண்டும்.

நம்ம காலத்தில் இந்த கம்பியூட்டர் இல்லை. இப்போது வந்திருக்கிறது. அதைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும் என்று ஒரு சில பெரியவர்கள் நினைக்கிறார்கள். அது தப்பு. வயதாகும் போது தனிமையை விரும்பும் தன்மையும் வரும். அதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம்.

இதில் நான் கொஞ்சம் விதி விலக்கு. என் கணிணினி உலகில் பங்காளிகளாக இருப்பது என்னுடைய பேரப் பிள்ளைகள்தான். குறிப்பாக, ஹரேஸ் எனும் ஐந்து வயது பேரன். தொலைபேசியில் பேசும் போது கணினியைப் பற்றிதான் பேச்சு. நேரில் சந்தித்தாலும் கணினியைப் பற்றிதான் பேச்சு.

ஆக, இந்த கணினியை வைத்துக் கொண்டு பேரப் பிள்ளைகளிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறேன். குடும்ப உறவுகளில் நல்லதைச் செய்யும் இந்தக் கணினியை ஒரு தெய்வமாக நினைக்க வேண்டும் என்று நான் சொல்வதில் தப்பு இல்லையே!

Kavi Nair Mahdevan <ka_v18@yahoo.com>
கே: நான்
4GB Apacer எனும் USBஐ பயன் படுத்துகிறேன். கணினிக்குள் செருகியதும் ஒழுங்காக வேலை செய்கிறது. ஆனால், My Computer எனும் கோப்புறையைத் தட்டியதும் அந்த குறுந்தட்டகம் பிரச்னை பண்ணுகிறது. என்ன செய்வது?

ப: இதற்கு காரணம் உங்களுடைய USB எனும் உலகளாவிய நேரியல் பாட்டை. இதைக் கணினியிலிருந்து வெளியாக்கும் போது Safely Remove எனும் முறையைப் பயன்படுத்தி வெளியாக்கி இருக்க வேண்டும்.

கணினிக்குள் செருகினோம் பிடுங்கினோம் என்று இருக்கக்கூடாது. பாதுகாப்பாக வெளியாக்க வேண்டும். இது கணினிக்குள் செருகி இருக்கும் போது பட்டென்று பிடுங்கினால் இந்தப் பிரச்னை வரும். இந்தப் பிரச்னையத் தீர்க்க வேண்டுமானால், My Computer > Drive C > Properties > Tools > USB > Run Error Checking என்பதைச் சொடுக்கி விடுங்கள்.

பிரச்னை தீரும் என்று நினைக்கிறேன். அப்படியும் முடியவில்லை என்றால் http://www.quickonlinetips/archives/2005/08/fix-format-usb-flash-drivers/ எனும் முகவரிக்குப் போய்ப் பாருங்கள். விளக்கம் கிடைக்கும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் மின்னஞ்சல் முகவரி: ksmuthukrishnan@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: