ksmuthukrishnan எழுதியவை | 08/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 9

சையது அப்துல்லா syedabdullah86@gmail.com

கே: என்னிடம் Compaq Presario V3700 எனும் மடிக்கணினி உள்ளது. இதில் விண்டோஸ் XP பதிவு Compaq-Presario-v3700-notebook கணினிசெய்து செயல்படுத்த விரும்புகிறேன். எப்படி பதிவு செய்வது என்று சொல்ல முடியுமா?

ப: எந்த ஒரு கணினியிலும் விண்டோஸ் எக்ஸ் பிஅல்லது விஸ்த்தாபோன்ற செயலிகளைப் பதிவு செய்வதற்கு முன்னால் கணினியைப் பற்றிய சில அடிப்படை விசயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு கணினியின் உயிர் நாடியில் கை வைக்கிறீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

புத்தம் புதிதாக Windows Operating System செயலிகளைப் பதிவு செய்வது என்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை. கணினியின் அடிப்படைச் செயல்பாடுகள் கண்டிப்பாகத் windows-7-logo,Q-W-160376-1தெரிந்திருக்க வேண்டும். விசயம் தெரியாமல் கை வைக்கக்கூடாது. கணினி பற்றி நன்கு தெரிந்திருந்தால் இந்தச் சோதனையில் ஈடுபடலாம். இல்லை என்றால் கணினி விற்பனை முகவர்களிடம் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள். செலவு RM70 க்குள் வரும். சில கடைகளில் RM100 வரை கேட்பார்கள்.

நீங்கள் ஈப்போ, புந்தோங் பகுதியில் இருந்தால், நானே செய்து கொடுத்து விடுவேன். கட்டணம் RM40 தான். உங்களுடைய கணினித் திறமையைச் சொல் லுங்கள். அப்புறம் விண்டோஸ் செயலிகளைப் பதிவு செய்வதைப் பற்றி பேசலாம்.

பொன்மணி நீலன், பண்டார் பொட்டானிக், கிள்ளான்

கே: நான் கணினியை இயக்கி, இணையத்திற்குள் நுழையும் போது Internet Explorer Add-ons disabled என்று வருகிறது. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. என் நண்பர் சொல்கிறார் கணினியின் விண்டோஸ் செயலியை மறுபடியும் பதிவு செய்யச் சொல்கிறார். கடையில் கேட்டால் RM200 செல வாகும் என்கிறார்கள். உதவி செய்யுங்கள்.malware

ப: தலை வலிக்கிறது என்பதற்காக தலையை வெட்டி வீசிவிடலாமா. அப்படிதான் இருக்கிறது உங்கள் கதையும். இது ஒன்றும் ஒரு பெரிய விஷயம் இல்லை. மிகச் சாதாரணமானது. Internet Explorer > Tools > Manage Addons > Enable என்பதைத் தட்டி விடுங்கள். ஒரு செய்திப் பட்டை வரும். அதில் Show என்பதைச் சொடுக்கி விடுங்கள். அவ்வளவுதான்! உங்கள் பிரச்னை தீர்ந்தது. உங்கள் செலவு இரண்டே இரண்டு நிமிடங்கள்.

வி. ஜெயாஸ்ரீ vs.jaya87@yahoo.com

கே: வணக்கம் ஐயா. சார், நீங்கள் நண்பன் நாளிதழில் கணினி பற்றி எழுதுவதைப் படிப்பேன். அதில் நீங்கள் அழகி இணையத்தள முகவரியைக் கொடுத்தீர்கள். ரொம்ப நன்றி. நான் உங்களை மலாக்கா, malwareடுரியான் துங்கல் நாதன் சார் வீட்டில் பார்த்திருக்கிறேன். நம்முடைய மடிக்கணினியில் Antivirus எனும் அழிவித் தடுப்பு அல்லது நச்சுத் தடுப்பு செயலி இல்லாமல் இண்டர்நெட் உபயோகித்தால் கணினிக்குப் பாதிப்பு வருமா?

ப: என்னம்மா இது. சட்டை போடாமல் வெளியே போனால் கொசு கடிக்குமா கடிக்காதா. கண்டிப்பாகக் கடிக்கும். இல்லையா. அதே போல இணையத்தில் ஆயிரக்கணக்கான அழிவிகள் மைக்கல் ஜாக்சன் பாடல்களை Virus, Worm, Trojan, Malware worm-or-virusஎன்று பற்பல கானங்களில் பாடிக் கொண்டிருக்கின்றன. என்ன ராகம் என்று கேட்க வேண்டாம். எல்லா ராகமும் உண்டு.

எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணினிக்குள் சத்தம் போடாமல் நுழைந்து குட்டி போடலாம். பேரன் பேத்தி எடுக்கலாம். அதனால் முன் ஜாக்கிரதையாக அழிவித் தடுப்புகளை பதித்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் ஆபத்து நிச்சயம் உண்டு. avast

இலவசமாக நிறைய அழிவித் தடுப்புகள் கிடைக்கின்றன. http://www.avg.com எனும் முகவரியில் AVG அழிவித் தடுப்பு கிடைக்கும். http://www.lavasoft.com எனும் முகவரியில் Ad-Aware கிடைக்கும்.

http://www.avira.com எனும் முகவரியில் Avira அழிவித் தடுப்பு கிடைக்கும். எல்லாம் இலவசம்தான். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நாதன் சார், ரவி சார் எப்படி இருக்கிறார்கள். கேட்டதாகச் சொல்லுங்கள்.

நவீனாஷ் <its.shuren@gmail.com>

கே: நான் என் கணினியைத் திறந்ததும் updates are ready, install these updates எனும் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது?

windows piracyப: நல்ல செய்திதானே. உங்கள் கணினிக்குத் தேவையான updates எனும் மேம்பாடுகளை உங்கள் கணினி பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளும். அவற்றைத் தாராளமாகப் பதித்துக் கொள்ளலாம். ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அடிப்படைச் செயலி அதாவது Windows செயலி அசலானதாக இருந்தால் பாதகமில்லை. அந்த செயலியைக் காசு கொடுத்து வாங்கியிருந்தால் பயம் இல்லாமல் புதிய மேம்பாடுகளைப் பதித்துக் கொள்ளலாம். அது இல்லாமல் Pirated Copy எனும் திருட்டு செயலியைக் கணினியில் பதித்திருந்தால் ஆபத்து காத்திருக்கிறது. அந்த மேம்பாடுகளைப் பதித்தால் பாதிப்பு வரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: