ksmuthukrishnan எழுதியவை | 08/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 8

இரா.செல்வகணேஷ், லோபாக், சிரம்பான்
கே: உங்களுடைய கேள்வி பதில்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால்,  சில வாரங்களாக பழைய, ஏற்கனவே வெளிவந்த கேள்வி பதில்களாக இருக்கின்றன. ஏன். என்ன ஆகிவிட்டது. மாற்றம் செய்யுங்கள்?

ப: கடந்த வாரங்களில் வெளியூர் போயிருந்ததால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. இனிமேல் வாராவாரம் புதிய புதிய விஷயங்கள் வரும். கருத்திற்கு நன்றி.ksmuthukrishnan cambodia

கோமகள் சின்னசாமி lomakai_ko21@yahoo.com
கே: சார், நான் ஒரு மருத்துவத்துறை மாணவி. அண்மையில் என்னுடைய கணினியை Format எனும் சுத்திகரிப்பு செய்தேன். அதனால் கணினியின் ஆவணங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. அவற்றில் என் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளும் பல இருந்தன. அழிந்து போன தகவல்களை மீட்டுக் கொள்ள சில கணினிக் கடைகளில் விசாரித்தேன். அவர்கள் RM250லிருந்து RM1000 வரை கேட்கிறார்கள். நான் ஒரு மாணவி. அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. விலை மலிவாக ஏதாவது நிரலி அல்லது மென்பொருள் கிடைக்குமா. ரொம்ப அவசரம் சார். ஒரு மகளைப் போல உங்களிடம் கேட்கிறேன்.

வணக்கம் ஐயாப: உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. எப்போதுமே கணினியைச் சுத்திகரிப்பு செய்வதற்கு முன்னால் அதிலுள்ள படங்கள், தகவல்கள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சுத்திகரிப்பு அல்லது Format என்றால் என்ன அர்த்தம்.

இருப்பதை எல்லாம் அழிப்பது அல்லது சுத்தம் செய்வது. எல்லாவற்றையும் அழித்த பிறகு, அழித்தவற்றை எல்லாம் மறுபடியும் மீட்டுக் கொள்வது என்பது நடக்கக் கூடிய காரியமா. இருந்தாலும் கணினியைப் பொருத்த வரையில் அழித்ததை மறுபடியும் மீட்டுக் கொள்ள முடியும். வழி இருக்கிறது. கடைக்காரர்கள் அவ்வளவு பணம் கேட்கிறார்கள் என்றால் நிச்சயம் காரணம் இருக்கிறது.

http://rapidshare.com/files/118530902/S.m.a.r.t-D.a.t.a.Recovery.4.1.rar எனும் முகவரிக்குப் போய் அழித்ததை மீட்கும் நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணம் இல்லை. File Sharing முறையில் கிடைக்கிறது.

சாம் ஜோசுவா sam.jo511@gmail.com
கே: என்னிடம் கணினி இல்லை. நான் ஒரு பள்ளி மாணவன். எனக்கு வேண்டிய தகவல்களைக் கணினி மையங்களுக்குப் போய் திரட்டிக் கொள்வேன். கணினி வாங்க வசதி இல்லை. USB எனும் wormattack150குறுந்தட்டகத்தைப் பயன் படுத்துகிறேன். இப்போது எனக்கு பிரச்னை. குறுந்தட்டகத்தைக் கணினியில் செருகியதும் RECYCLER\S-5-3-42-2819952290 என்று எச்சரிக்கை வருகிறது. தட்டகமும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. Anti Virus எனும் தடுப்பு அழிவிகளையும் பயன் படுத்திவிட்டேன். ஐயா, நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்.

ப: இதற்கு காரணம் Trojan எனும் அழிவியாகும். இந்த அழிவியின் பெயர் WORM_DOWNAD. நீங்கள் என்ன செய்தாலும் அதை அழிக்க முடியாது. USB குறுந்தட்டகங்கள் மூலமாகப் பரவுகிறது. ஒன்றை அழித்தால் இன்னொன்று பிறக்கும். அதை அழித்தால் இன்னும் ஒன்று வரும். கடைசி வரை அழிக்கவே முடியாது. வேரோடு அழித்தால்தான் முடியும். வழி இருக்கிறது.

அதற்கு http://66.35.255.211/download/engine.asp எனும் முகவரிக்குப் போய் இலவசமாக நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்னை தீரும்.

முனியாண்டி சீலன், தாமான் பூலாய் உத்தாமா, ஸ்கூடாய்
கே: என்னுடைய வயது 49. டெலிகாம் மலேசியாவில் கடந்த 29 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். கணினி பழுது பார்க்கும் துறையில் ஈடுபட எனக்கு நிறைய ஆசை. பயிற்சிகளில் பங்கு பெற வேண்டும். ஆனால், நீண்ட கால விடுமுறை எடுக்க முடியாது. எங்கே இலவசமாக கணினி பழுது பார்க்கும் படிப்பைச் சொல்லித் தருகிறார்கள். வீட்டில் இருந்தவாறே படிக்க முடியுமா?55 ஆவது வயதில் சிப்பாங் சுங்கை பீலேக், பங்கூரீஸ் விடுதி பயணர்களின் பயன் பாட்டிற்கு ஓர் இணைய அறையை உருவாக்கும் பணி.வயது முக்கியம் அல்ல. தன்னம்பிக்கை முக்கியம்.

ப: உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. கணினியைப் பழுது பார்க்கும் துறையில் ஈடுபட வேண்டும். அவ்வளவுதானே! கவலையை விடுங்கள். எப்போது படிக்க வேண்டும் என்று ஆசைபட்டீர்களோ அப்போதே பாதிக் கடலைத் தாண்டி விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

கணினியைப் பழுது பார்ப்பது என்பது ஒரு பெரிய கம்பச் சித்திரம் இல்லை. 50 வயதில் நான் அந்தத் துறையில் ஈடுபட்டேன். ரொம்பவும் கஷ்டப்பட்டேன். தேர்வும் பெற்றேன். இப்போது யார் வேண்டுமானாலும் படிக்கலாம். வயதின் மீது பாரத்தைப் போடக் கூடாது. பல நிறுவனங்கள் உதவி செய்கின்றன.

பல இணையத் தளங்கள் உள்ளன. http://www.helpwithpcs.com/courses/Course.htm எனும் முகவரியில் இலவசமாகச் சொல்லித் தருகிறார்கள். போய் விவரங்களைக் கண்டறியுங்கள்.

Advertisements

Responses

  1. sir,
    im one of the fan for kaniniyum neengalum on tamil nanban..sir i have problem with my pc.that ,last week i already format my pc.but unfortunatelly i loss my important data on my disk…sir kindly request for is it have any software that can recover my data plz..thanks…if have plz sent to my email adress…nirmanman85@yahoo.com


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: