ksmuthukrishnan எழுதியவை | 08/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 7

ஜெ.வேளாங்கண்ணி, ஜாலான் கூபு, மலாக்கா
கே
: என் கணினியில் பார்க்கும் படங்களை அப்படியே தொலைக் காட்சியிலும் பார்க்க முடியுமா?

ப: முடியும். S-Video Cable எனும் ஓர் இணைப்பு வடம் உள்ளது. விலை RM.15. மலாக்காவிலுள்ள எல்லா பேரங்காடிகளில் கிடைக்கும். கணினி விற்பனை கடைகளிலும் கிடைக்கும். உங்கள் கணினியைத் nintendo-wii-av-svideoதொலைக்காட்சி பெட்டியுடன் இந்த இணைப்பு வடத்தின் மூலம் இணைத்துக் கொள்ளுங்கள். இரண்டு சாதனங்களையும் தொடக்கி விடுங்கள். அப்புறம் நீங்கள் கணினியில் என்ன பார்க்கிறீர்களோ அது அப்படியே தொலைக்காட்சியிலும் தெரியும். நீங்கள் தட்டச்சு செய்வதைகூட மற்றவர்கள் பார்க்கலாம். இன்னொன்று VGA முறை. இப்பொழுது வரும் தொலைக்காட்சி பெட்டிகளில் இந்த VGA இணைப்பு முறை உண்டு. இந்த இணைப்புச் சுருளின் விலை RM10. இரண்டு சாதனங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். நீங்கள் கணினியைப் பயன்படுத்தியது மாதிரியும் இருக்கும். கணினி இப்படிதான் வேலை செய்கிறது என்று மற்றவர்கள் பார்த்த மாதிரியும் இருக்கும். 

எஸ்.பாலசேகரன் சுப்பையா, ஜெலாப்பாங், ஈப்போ
கே
: எனக்கு சிறுவர்களுக்கான மலாய், ஆங்கிலம், தமிழ், கணிதம் போன்ற பயிற்சிகள் தேவை. எந்த இணையத்தளத்தில் தேடுவது?

0a4c0cbe198a93c085451996bc5a09f4e9fbf130ப: கல்வி சம்பந்தமான ஆயிரக்கணக்கான விளையாட்டுகள், பயிற்சிகள் போன்றவை http://soft-best.net/en/ எனும் இடத்தில் இலவசமாகக் கிடைக்கும். தமிழ் விளையாட்டு நிரலிகள் http://www.mylanguageexchange.com எனும் இடத்தில் கிடைக்கும். இணையத்தளங்களில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். விவேகமாகத் தேர்வு செய்யுங்கள்.

. சரவணன், ராசா, சிரம்பான்
கே
: கணினியில் எந்த எழுத்துகளை அச்சடிக்க முடியாது?

ப: எல்லா எழுத்துகளையும் அச்சடிக்கலாம். ஆனால், CON எனும் பெயரில் மட்டும் கோப்புகளை (Folder) ?????உருவாக்க முடியாது. ஏன் என்று தெரியவில்லை. இந்த ஒன்றே ஒன்றுதான் மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கும் தெரியவில்லை. உலகத்தையே ஆச்சரியப்பட வைக்கும் செய்தியும் இதுதான்.

திருவே பாலசேனா, பத்து தீகா, ஷா ஆலாம்.
கே
: அடுத்தவர் கணினியில் என்ன நடக்கிறது என்பதை என் கணினியிலிருந்து பார்க்க முடியுமா. என்னுடைய கணினி ஈப்போவில் இருக்கிறது. அவருடைய கணினி இந்தியாவில் இருக்கிறது?

ப: ஒருவருடைய கணினி, உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அந்தக் கணினியில் என்ன நடக்கிறது என்பதை இங்கே இருந்த பார்க்க முடியும். அவர் என்ன படம் பார்க்கிறார். என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று எல்லா விவரங்களையும் கண்டறியலாம். Remote Desktop Connection எனும் முறையில் இது நடக்கிறது. இணையத் தொடர்பு இருக்க வேண்டும். இந்த வசதி எல்லா கணினிகளிலும் உண்டு. ஆனால், அதைப் பயன்படுத்த தெரிய வேண்டும். இதைத் தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்.

எஸ். தம்பிராஜா, லுக்குட், நெகிரி செம்பிலான்.
கே
: இணையத்தில் ஒரே சமயத்தில் எவ்வளவு பேர் தொடர்பு கொண்டிருப்பார்கள்?

இணையம் என்பது ஒரு மாய வலைப: உலகம் எங்கோ போய்விட்டது. இணையம் இல்லாமல் மனிதன் பேர் போட முடியாத நிலையும் வந்துவிட்டது. உலகில் 1,319,872,109 பேர் இணையத் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

எல்.ஞானசேகரன், தாமான் ஸ்கூடாய், ஜொகூர் பாரு.
கே
: Mouse என்று சொல்லப்படும் சுழலி எப்போது கண்டுபிடிக்கப்படாது?

ப: Doug Engelbart என்பவர் 1964 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 45 ஆண்டுகளாகி விட்டன. முதன் முதலில் பலகையால் சுழலியைச் செய்தார். அது இன்னும் பத்திரமாக அருங்காட்சியத்தில் 11308.1.0இருக்கிறது. கணினியைப் பற்றிய இன்னும் ஒரு சுவையான செய்தி. நாம் வழக்கமாக நிமிடத்திற்கு 20 முறை கண் சிமிட்டுகிறோம். ஆனால், கணினியைப் பயன்படுத்தும் போது நிமிடத்திற்கு ஏழு முறைதான் கண் சிமிட்டுகிறோம். கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். எதற்கும் நீங்களும் ஆராய்ச்சி செய்து பாருங்களேன்.

Advertisements

Responses

 1. தங்களுடைய ஆதரவான சொற்களுக்கு நன்றி.
  என்னால் இயன்ற வரை உலவு இணையத் தளத்திற்கு ஒத்துழைப்பு தருவேன். நன்றி. வணக்கம்.

 2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: