ksmuthukrishnan எழுதியவை | 07/09/2009

கணினியும் நீங்களும் – 1

உலகமே கணினி மயமாக மாறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் கணினி இல்லை என்றால் மனுக்குலம் இயங்காது எனும் ஒரு நிலைமை ஏற்படப் போகிறது. உண்மையிலும் உண்மை. அதற்குள் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அது என்ன கணினி, தேவையில்லாத ஒரு பிரச்னை என்று நீங்கள் நினைத்தால் பிரச்னை பின்னர் உங்களுக்குத்தான்.

gamer

ஏனென்றால், கணினி இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. அப்போது நீங்கள் நிச்சயம் பின் தள்ளப்படுவீர்கள். அப்புறம் உங்கள் சந்ததியினர் உங்களை மதிப்புக் குறைவுடன் பார்க்கலாம். மூன்றாம் உலக ஞான மனிதராகப் பார்த்தாலும் பார்க்கலாம். அந்த மாதிரியான நிலைமை வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் கணினியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். படித்துக் கொள்ளுங்கள். சொல்வதைக் கேளுங்கள்.

கலைச் சொற்கள்

அதற்கு முன்னதாக ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். Internet என்று சொல்லப்படும் இணையத்தில் கணினித் தமிழ்ச் சொற்கள் புதிது புதிதாக வந்து கொண்டு இருக்கின்றன. உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழ் ஆர்வலர்கள் கணினித் தமிழ்ச் சொற்களை உருவாக்கி உலா விடுகின்றனர். தமிழார்வ மிகுதியால் புதிது புதிதாக நிறையச் சொற்கள் வந்துவிட்டன.hp-laptop-computers-2

முடிந்த வரையில் சரியான, பொருத்தமான சொற்களைப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன். கணினியைப் பற்றி எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதால், அவற்றைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் சற்று சிரமம் ஏற்படுகிறது. Technical Terms எனப்படும் கலைச் சொற்கள் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆகவே, இலகுவான தமிழில் சொல்லப் பார்க்கிறேன். தவறுகள் ஏற்படும். இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

இந்தக் கட்டத்தில், உலகில் அதிகமான கணினித் தமிழ்ச் சொற்களை உருவாக்கிக் கொடுத் தவர்கள் மலேசியத் தமிழர்கள். அவர்களுக்கு நன்றி சொல்வோம். சரி! கணினியும் நீங்களும் எனும் தொடருக்குள் காலடி எடுத்து வைக்கலாமா?

மேசைக் கணினி

கணினிகளில் பல வகைகள் உள்ளன. அவை என்னவென்று முதலில் தெரிந்து கொள்வோம். Personal Computer என்பது  ஒரு வகை. இதனைத் தனிக்கணினி என்பார்கள். இதற்கு Desktop Computer அல்லது  மேசைக் கணினி எனும் மற்றொரு பெயரும் உண்டு. இந்த வகையான தனிக்கணினிகளை நாம் எல்லோரும் வீட்டில் பயன்படுத்துகிறோம். இப்போது RM1000க்குள் ஒரு நல்ல தரமான கணினி கிடைக்கும். அந்த அளவிற்கு விலை மிகவும் குறைந்து விட்டது.latest

தனிக்கணினிகள் தனிநபர்களின் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுபவை. சிறிய பெரிய அளவிலான அலுவலக வேலைகளையும் செய்யலாம். ஒருவருக்குத் தேவைப்படும் Programs எனப்படும் செயல் இயக்கிகள் மட்டுமே இந்தக் கணினியில் இருக்கும். செயல்படும். சின்னச் சின்ன தனிப்பட்ட வேலைகளைச் செய்து முடிக்கலாம். இப்போது புழக்கத்தில் உள்ள தனிக்கணினிகள் பெரிய பெரிய வேலைகளை எல்லாம் செய்யும் ஆற்றலைப் பெற்றவை. விலையும் மலிவு.

மடிக்கணினி

அடுத்ததாக, Laptop Computer என்று சொல்லப்படும் மடிக்கணினி. இந்தக் கணினியைத் தோளில் மாட்டிக் கொண்டு எங்கே வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லலாம். தொலை தூரங்களுக்குச் செல்லும் போது, அப்படியே மடியில் வைத்துக் கொள்ளலாம். பயணம் செய்தவாறு அலுவலக, சொந்த வேலைகளைச் செய்யலாம். இதன் எடை ஐந்திலிருந்து எட்டு கிலோ கிராம்களுக்குள் இருக்கும்.

12_Inch_LCD_Touch_Screen_Monitor_for_Computers_TV_DVD_Player

விலைகூட இப்போது RM1500க்குள் குறைந்து விட்டது. கணினிகளின் விலையைக் குறைத்துவிட்ட மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். கணினிப் பொருட்களுக்கு அரசாங்கம் எந்த வரியையும் விதிப்பதில்லை. மாறாக உதவித் தொகை வழங்குகிறது. இலவசமாகக் கணினி படிப்பதற்கு பலவகையான மான்யங்களையும் தாராளமாக கொடுக்கிறது.

பரிமாறிக் கணினி

அடுத்து,Server என்று சொல்லப்படும் பரிமாறிக் கணினி. இந்தக் கணினி உருவத்தில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். ஒரு நிறுவனத்தில் எங்காவது ஒரு மூலையில், பிடித்து வைத்த பிள்ளையார் போல இருக்கும். எல்லாத் தகவல் புள்ளிவிவரங்களையும் மொத்தமாக வைத்திருக்கும். நிறுவனத்தின் மற்ற எல்லாக் கணினிகளும் இதனுடன் 24 மணி நேர தொடர்பு கொண் டிருக்கும். இந்தத் தொடர்பு முறைக்கு Networking என்று சொல்வார்கள். தமிழில் வலைப்பின்னல் அல்லது பணிப்பின்னல் என்று சொல்லலாம். harddrive

இந்தப் பரிமாறிக் கணினியைக் கொண்டு எட்டாவது மாடியில் உள்ள ஒருவர் எண்பதாவது மாடியில் உள்ளவருடன் தொடர்பு கொள்ளலாம். ஒரே ஒரு வினாடியில் ஆயிரம் கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டது. அடுத்த வினாடியே பல நூறு கணினிகளுக்கு விடையைக் கொடுத்தும்விடும். எல்லாமே வினாடிக் கணக்கில்தான். இந்தப் பரிமாறிக் கணினியின் விலை சற்று அதிகம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் பத்து பதினைந்து இலட்சம் வெள்ளிக்கு விலைப் போய்க் கொண்டிருந்தது. இப்போது RM30,000க்கு இறங்கி விட்டது. தனிநபர்களுக்கு இந்தக் கணினி தேவையில்லை. பெரும் நிறுவனங்கள் பயன்படுத்துபவை.

மிகைவேகக் கணினி

Super Computer என்பது ஒருவகை. இந்தச் சூப்பர் கணினியைக் தமிழில் மிகைவேகக் கணினி அல்லது அதிவேகக் கணினி என்று சொல்லலாம். இவை உலகின் சில நாடுகளில் மட்டுமே உள்ளன. சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று சொல்கிறார்களே. அந்த மாதிரி! பெரும் பெரும் அறிவியல் கணக்கு வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கணினிகளை நம் நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம். மிக மிகக் குறைவு. விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கு பயன்படுத்துகிறார்கள். விலை கோடிக்கணக்கில் போகும். மலேசிய அறிவியல் பல்கல்கலைக்கழக்த்தில் மிகைவேகக்கணினி ஒன்று இருக்கிறது.110291-front

ணினியின் பாகங்கள்

ஒரு கணினியைத் திறந்து பார்த்தால் பலவகையான மின்கம்பிகள், பிலாஸ்டிக்கில் செய்யப்பட்ட இணைப்பான்கள்-connectors, தொடர்பு பட்டைகள்-cables, பிலாஸ்டிக் அட்டைகள் என்று எக்கச்சக்கமாக இருக்கும். புதிதாகப் பார்ப்பவர்களுக்கு சர்க்கஸ் கூண்டு போல இருக்கும். பலவகையான உபகரணங்களும் இருக்கும். ஒவ்வொரு உபகரணமும் ஒரு குறிக்கப்பட்ட வேலையைச் செய்யும். இந்த உபகரணங்களை Peripherals என்று அழைக்கிறார்கள். இந்தப்   பொருட்களை எல்லாம் சுமந்து கொண்டு ஒரு பெரிய அட்டை இருக்கும்.

தாய்ப்பலகை Motherboard

அந்தப் பெரிய அட்டைக்குப் பெயர் Motherboard. தமிழில் தாய்ப்பலகை என்று பெயர். இந்தத் தாய்ப்பலகையின் உள்ளேதான் மின்சாரம் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். மின்சாரம் என்றதும் ஏதோ துணி துவைக்கும் இயந்திரத்திற்குப் போகுமே மின்சாரம், அந்த மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். துணி துவைக்கும் இயந்திரத்திற்கு ஆயிரம் வால்ட் மின்சாரம் தேவை. அவ்வளவு மின்சாரம் கணினிக்குள் போனால் என்னவாகும். அப்புறம் கணினிக்குள் கருவாடு சுட்ட கதைதான். கருவாடு சுட்ட வாசம் வருகிறதோ இல்லையோ கணினியிலிருந்து திடீர் மின்னலும் வரும் திடீர் இடியும் வரும்.

ஆனால், நம்முடைய கணினியின் தாய்ப் பலகைக்கு அதிகப் பட்சம் ஆறு வால்ட்கள் கிடைத்தால் போதும். அதற்கு மேலும் முடியும். இப்போது வரும் தாய்ப்பலகைகள் 12 வால்ட்டையும் தாங்கக்கூடியவை. கணினியில் செருகப்பட்டிருக்கும் மற்ற மற்ற உபகரணங்களுக்கு 12 வால்ட்கள் வரை போதும். மனிதர்கள் மாறுவதைப் போல கணினிகளும் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டுதான் வருகின்றன. இந்த மாற்றங்களினால் கணினியின் செயல்பாட்டுத் திறனும் சக்தியும் கூடி வருகிறது.

மையச் செயலகம் – Central Processing Unit

தாய்ப்பலகையின் ஓர் ஓரத்தில் CPU – Central Processing Unit எனும் ஒரு மையச் செயலகம் இருக்கும். மனிதனுக்கு மூளை எப்படி முக்கியமோ அந்த அளவில் கணினிக்கு இந்த மையச்   செயலகம் முக்கியம். கணினியின் மொத்தச் செயல்பாட்டையும் இதுதான் கவனித்துக் கொள் கிறது. a271-4872-c26

சூட்டைத் தணிப்பதற்கு அதன் மேல் ஒரு காற்றாடி இருக்கும். தாய்ப் பலகையினுள் மின்சாரம் பாய்ந்ததும் இந்தக் காற்றாடியும் மிக வேகமாகச் சுற்றும். காற்றாடி இல்லை என்றால் கீழே இருக்கும் Processor எனப்படும் செயலாக்கி மூன்று நிமிடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். அவ்வளவு சூடு. எரிந்து போகும். அதற்குப் பதிலாக வேறொரு செயலாக்கியை வாங்குவது என்றால் விலை ஏறக்குறைய RM200 வரலாம்.

Keyboard என்று அழக்கப்படும் விசைப்பலகையில் நீங்கள் ஓர் எழுத்தைத் தட்டினால், அந்தச்   செய்தி முதலில் இந்த மையச் செயலகத்திற்குதான் போகும். அது என்ன எழுத்து என்று இந்த மையச் செயலகம் தீர்மானிக்கிறது. அந்த எழுத்து எங்கே போக வேண்டும் என்பதை முடிவு    செய்கிறது.

அப்புறம் தொடர்ந்து வரும் எழுத்துகள், கட்டளைகள் எல்லாவற்றையும் தரம் பிரித்து அவற்றுக்கு ஏற்றவாறு கணினியை வழி நடத்துகிறது. பின்னர், அந்தச் செய்திகளைத் திரையில் காட்டுகிறது. கணினி என்றதும் முதலில் தெரிவது இந்தத் திரைதான்.

தொலைக்காட்சி பெட்டி போல ஒன்று உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்குமே அதுதான் இந்தத் திரை. கணினித்திரை என்று சொன்னால்தான் ஓரளவுக்குப் புரியும். இதை Monitor என்று சொல்வார்கள். இது ஒரு ஜடப் பொருள். கணினியிடமிருந்து செய்திகளை வாங்கித் திரையில் காட்டுகிறது. அவ்வளவுதான். வேறு எந்த வேலையும் கிடையாது.recyclecomputer-main_Full

இன்னொரு விஷயம். மனிதனைப் போல கணினியால் சிந்திக்க முடியாது. நல்லது கெட்டது சரி பிழை என்று எதுவுமே அதற்கு தெரியாது. தன்னை உருவாக்கியது யார் என்றும் தெரியாது. ஆனால், மனிதன் சொல்லும் கட்டளைகளை நொடிப் பொழுதில் செய்துவிடுகிறது. மனிதன்    சொன்னால்தான் அது கேட்கும். செய்யும். சொன்னதைச் செய்யக்கூடியது.

சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. இதில் ஒரு வேடிக்கை. மனிதனின் கட்டளைகளை நிறைவேற்றும் போது மனிதனையே அது மிஞ்சிவிடுகிறது. அதன் வேகம் இருக்கிறதே அது மனித மூளையின் வேகத்தையே தாண்டிவிடுகிறது. அபாரமான வேகம். மின்னல் வேகம் என்பார்களே அதேதான்!

நினைவகம் Memory

அடுத்து Memory என்று கொள்ளடக்கம் வருகிறது. கணினியின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நினைவில் வைத்துக் கொள்ள இந்தக் கொள்ளடக்கம் தேவை. அது ஒரு தற்- காலிக நினைவகம் என்று சொன்னாலும் தப்பில்லை. நாம் தயாரிக்கும் ஆவணங்கள், செய்திகள், கணக்குகள், படங்கள் போன்றவற்றைத் தற்காலிகமாக நினைவில் வைத்துக் கொள்ள இந்த நினைவகம் உதவுகிறது. இந்த நினைவகத்திற்கு வந்தபிறகுதான் செயலாக்கியின் செயல்பாடுகள் செய்திகள் எல்லாம் வன் தட்டுக்குள் போகின்றன.

world-earth-day

இந்தத் தற்காலிக நினைவகத்தை RAM என்று சொல்கிறார்கள். Random Access Memory என்பதின் சுருக்கமே அது. EDR, SDR, DDR என்று பலவகைக் கொள்ளடக்கங்கள் உள்ளன. இந்த 2008ஆம் ஆண்டில் DDR3 வந்துவிட்டது. இவற்றுக்கான விளக்கங்களைப் போகப் போக தெரிந்து கொள்வீர்கள். இப்போது வேண்டாம்.

பேருந்து Bus

அடுத்ததாக Bus எனும் பேருந்து. தாய்ப்பலகைக்குள் இந்தப் பேருந்து இருக்கிறது. மிக மிக நுண்ணிய மின் கோடுகள் இருக்கின்றன. இந்த மின்கோடுகளின் வழியாக 0,1 எனும் பைனரி எண்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மத்தியச் செயலகம் என்று சொன்னது ஞாபகம் வருகிறதா.

அங்கே இருந்துதான் இந்த பைனரி எண்கள் பயணம் செய்கின்றன. சாதாரணமாக ஒரு பேருந்தில் 40 பேர் ஏற முடியும். அதைப் போல 8 பைனரி எண்களைச் சுமந்து கொண்டு இந்த மினிப் பேருந்துகள் மின்கோடுகள் வழியாகச் செல்லும். தாய்ப்பலகையில் பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு மின்கோடுகள் இருக்கின்றன. எங்கே போய்ச் சேர வேண்டுமோ அந்த இடத்தில் இந்தப் பைனரி எண்கள் கொண்டு போய் ஒப்படைக்கப்படும்.

மின்னகம் – Power Supply

சரி! அடுத்து Power Supply எனும் மின்னகம் வருகிறது. 230லிருந்து 400 வால்ட் வரை மின்சக்தியை கிரகிக்கும். அப்புறம்  அதை 12வால்ட், 6வால்ட், 3வால்ட் என்று தனித்தனியாகப் பிரிக்கிறது. எந்தப் பாகத்திற்கு எவ்வளவு மின்சாரம் போக வேண்டும் என்பதையும் நிர்ணயம்    செய்கிறது.

அடுத்து Expansion Slots எனும் கூடுதல் இடுக்குகள். தாய்ப்பலகையில் மூன்று அல்லது நான்கு இடுக்குகள் இருக்கும். பெரும்பாலும் இவை வெள்ளை நிறத்தில் இருக்கும். நீங்கள் பார்க்கலாம். இந்த இடுக்குகளில்தான் Sound Card எனப்படும் ஒலிக்கிரமி அல்லது சத்தக்கிரமி, Modem எனப்படும் இணையத் தொடர்பு அட்டை, USB எனும் அனைத்து தொடர்பு அட்டை போன்றவை செருகப்படும். இவற்றிற்கு மூன்று வால்ட் மின்சாரம் போகிறது.

Advertisements

Responses

  1. கணினியைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. நன்றி-தமிழ் முதல்வன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: