ksmuthukrishnan எழுதியவை | 05/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 6

(மின்னஞ்சல் மூலம் கேள்விகள் கேட்கும் வாசகர்களின் கவனத்திற்கு கணினி கேள்விகளை ஆங்கில, தேசிய மொழிகளில் கேட்கலாம். தயவு செய்து கைத்தொலைபேசியில் SMS எனும் குறும் செய்தி அனுப்புவதைப் போல கேள்விகளைக் கேட்க வேண்டாம். என்ன ஏது என்று புரியாமல் போகிறது. அப்புறம் எப்படி பதில் கொடுப்பது. முகவரி இல்லாமல் வரும் மின்னஞ்சல் கடிதங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதைப் பணிவுடன் சொல்லிக் கொள்கிறோம். – பொறுப்பாசிரியர்)

திருமதி.இரா.ரஞ்சிதம், ரூமா முரா அவாம், சிலாண்டார், மலாக்கா

கே: மல்லிகைப்பூ வாசம் வரும் கணினி வந்துவிட்டதாமே. அந்த அளவுக்கு கணினி உலகம் முன்னேறிவிட்டதா?

ப: இது பழைய விஷயம். மூன்றாண்டுகளுக்கு முன்னாலேயே இந்த மாதிரியான கண்டுபிடிப்பு வந்துவிட்டது. USB எனும் குறுந்தட்டகங்கள் இருக்கின்றன. அவற்றில் Trisenx என்பது அந்த வேலையைச் செய்யும். அதைக் கணினியில் செருகிக் கொள்ள வேண்டும். 20 வகையான வாசனைகள் இருக்கும். trisenx_scent_domeஉங்களுக்கு என்ன மாதிரியான வாசனை வேண்டும். அதைத் தேர்வு   செய்யுங்கள். அவ்வளவுதான். உங்கள் அறை முழுமையும் கம கம வாசம் பரவும். எந்த நேரத்தில் அந்த வாசம் வர வேண்டும் எவ்வளவு நேரம் வரவேண்டும்  என்பதையும் நீங்கள் கணினியிடம்   சொல்லி விடலாம். அது மட்டுமல்ல. அந்த 20 வாசனைகளை வைத்துக் கொண்டு நீங்கள் 2000 வகையான வாசனைக் கலவைகளைச் சொந்தமாக  உருவாக்கிக் கொள்ளலாம். அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் வழியாகவும் வாசம் உங்கள் கணினிக்குள் வரும். அப்புறம் வீடே கமகமக்கும். Digiscents எனும் நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. விலை மலிவு. RM100க்குள் இருக்கும். ஒரே சமயத்தில் பல நூறு பேருக்கு மின்னஞ்சல் மூலமாக வாசனைக் கடிதங்களை அனுப்பும் நவீனக் கலையும் வந்துவிட்டது.

ஆர். சதாசிவம், அம்பாங் இண்டா, கோலாலம்பூர்

கே: ஒருவர் மின்னஞ்சல் அனுப்புகிறார். ஆனால், அவர் வசிக்கும் இடத்தின் முகவரியைக் கொடுக்கவில்லை. உலகில் எங்கோ ஒரு மூலையில் இருந்து அனுப்புகிறார். அவருடைய மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு அவரின் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியுமா? கணினியால் செய்ய முடியுமா? அந்தத் திறமை …… இருக்கிறதா? உதாரணமாக anbesivam@gmail.com எனும் முகவரி. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

ப: இது ஒன்றும் பெரிய கம்பச் சித்திரம் அல்ல. மின்னஞ்சல் கடிதங்களில் பெயர் மட்டுமே இருக்கும். வீட்டு முகவரி இருக்காது. ip2locationஅஞ்சு பத்து கடன் கேட்க போய் விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு. பரவாயில்லை. ஒருவர் கேட்கும் கேள்வி, அவர் கேட்கும் முறைகளை வைத்து அவர் எப்படி பட்டவர் என்பதைக் கொஞ்சம் எடை போடலாம். கொஞ்சம்தான். இந்த இடத்தில் அனுபவம் பேசுகிறது. அவர் எங்கே இருந்து கேட்கிறார் என்பது நமக்குத் தெரியாது. இருந்தாலும் அதையும் கண்டிபிடிக்க Program எனும் நிரலி உள்ளது. அதன் பெயர் IP2 Locator.

இந்த அன்பேசிவம் எனும் மின்னஞ்சலைத் துருவிப் பார்த்தால் அந்தப் பெயரில் ஏற்கனவே உலகில் 15 பேர் இருக்கிறார்கள். அது பிரச்னை இல்லை. இந்தக் கடிதம் அதாவது உங்கள் கடிதம் எங்கே இருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள். மேலே சொன்ன நிரலியை இயக்கிப் பார்த்தேன். Coordinates கொடுத்துவிட்டது. அப்புறம் என்ன. நீங்கள் குவந்தானில் உள்ள விஸ்தானா ஒட்டலில் இருந்து இந்த மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறீர்கள். அந்த ஓட்டலின் கூரையின் நிறம் … Google Earth மூலமாகக் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் விண்டோஸ் விஸ்தாவைப் பயன்படுத்துகிறீர்கள். மன்னிக்கவும். ஏற்கனவே ஜொகூர் கோத்தா திங்கியிலிருந்து சிலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறீர்கள். போதுமா. இன்னும் வேண்டுமா.

திருமதி. மனோரஞ்சிதம் கலைவாணன், சிகாம்புட், கோலாலம்பூர்

கே: சார் வணக்கம். தமிழ் எழுத்துகளில் TAM என்றும் TAB என்றும் Unicode என்றும் இருக்கிறதே. அப்படி என்றால் என்ன அர்த்தம். குழப்பமாக இருக்கிறது.

ப: TAM என்றால் Tamil Mono-lingual என்று அர்த்தம். தமிழ் எழுத்துகளை மட்டுமே தனியாகக் கொண்டது. TAB என்றால் Tamil Bilingual என்று அர்த்தம். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திருந்து தமிழுக்கும் மாற்றக்கூடிய தன்மை கொண்டது. Unicode என்றால் உலகம் முழுமையும் ஒரே எழுத்துகளைக் கொண்டது. லதா, சுருதி, ரவி, மங்கல், கௌதமி, கார்த்திகா போன்றவற்றைச் சொல்லலாம். இவை யுனிகோட் முறையைச் சேர்ந்தவை. இதில் முரசு அஞ்சலில் வரும் இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் ஒலியியல் முறையில் இயங்கும் TAM எழுத்துகள்.

logo_tamil

கலைவாணன், சிகாம்புட், கோலாலம்பூர்

கே: எங்களுடைய கணினியில் முரசு அஞ்சல் சரியாக வேலை செய்யவில்லை. நாங்கள் விண்டோஸ் விஸ்தா பயன்படுத்துகிறோம். வேறு தமிழ்ச் செயலிகள் இருக்கிறதா?

ப: விண்டோஸ் விஸ்தாவில் பிரச்னை வரும். கவலையை விடுங்கள். நம்முடைய மலேசியத் தமிழ்க் கணினிச் சிகரம் முத்து நெடுமாறன் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

தமிழ் நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் உலக மக்களுக்காக தமிழ் தட்டச்சு முறையைக் கொண்டு viswaவந்திருக்கிறார். அதன் பெயர் அழகி. நீங்கள் நேராக Microsoft Word ல் தட்டச்சு செய்யலாம். இதில் ஒரு பெரிய சாதனை என்னவென்றால் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது இன்னொரு பகுதியில் தமிழில் எழுத்துகள் வந்து கொண்டே இருக்கும். அதைக் கண்டுபிடித்தவரின் பெயர் விஷ’ விஸ்வநாதன். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ்க்கணினி உலகிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். தமிழ் அன்னையின் சிறப்பு மைந்தன். Colitis எனும் வாத நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார். I went to USA. I settled in USA எனும் கொள்கையிலிருந்து மாறுபட்டவர்.

gsகொடும் நோயினால் தளர்ந்து போகாமல் தனக்கு வந்த தடைக் கற்களை படிக்கற்களாக்கி ‘அழகி’ எனும் மென்பொருள் தொகுப்பை உருவாக்கினார். சைலேந்திரா எனும் எழுத்துருவில் இயங்குகிறது. இந்திரா என்பது அவருடைய அம்மாவின் பெயர். http://www.azhagi.com/free.html எனும் இணையத் தளத்தில் இலவசமாகக் கிடைகிறது. முடிந்தால் அவருக்குப் பண உதவி செய்யுங்கள்.

ஆர். சுப்பிரமணியம், ஜாலான் கோலகங்சார், ஈப்போ

கே: இணையத்தில் எத்தனையோ கோடிக் கோடியான இணையத்தளங்கள் உள்ளன. அவற்றில் நீங்கள் பார்த்ததில் உங்கள் மனதைப் பாதித்த இணையத்தளம் ஏதும் இருக்கிறதா?

ப: நல்ல நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். http://azhagi.com/all/jana எனும் இணையத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். கண்ணிநீர் வரும். ஜனார்த்தனம் எனும் சிறுவனின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடி இருக்கிறது. இரண்டு கைகள் இல்லை. jpaint4ஒரு காலும் இல்லை. எட்டு வயதாக இருக்கும் போது மினசாரம் தாக்கி உயிர் பிழைத்திருக்கிறான். இப்போது வாயால் பிரஷைப் பிடித்து படம் வரைகிறான். தமிழர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். அதில் அவன் வாழ்க்கை ஓடுகிறது. பரிதாபமான கோலம். ஆனால் அபரிதமான நம்பிக்கைத் திருக்கோலம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: