ksmuthukrishnan எழுதியவை | 04/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 4

NANBANஎஸ்.பாலசேகரன் சுப்பையா, ஜெலாப்பாங், ஈப்போ
கே: இணையத்தைக் கண்டுபிடித்தது யார்
?

ப: தனிநபர் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இணையம் பல அறிஞர்களின் சிந்தனையில் உருவானது. முதன் முதலில் 1961ல் லியானர்ட் கிளேன்ராக் என்பவர்தான் இணையத்தைப்பற்றி வியூகம் செய்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு Tim Berners Lee என்பவர் World Wide Web எனும் வையக விரிவு வலையை உருவாக்கினார். அதன்பிறகு இப்போது இணையம் இமயமலை உயரத்திற்குப் போய்விட்டது. உண்மையான வடிவம் கொடுத்தவர் திம் பெர்னர்ஸ் லீ தான்.

Tim Bernes Leeஇவர் நினத்திருந்தால் பில் கேட்ஸ் போல வியாபாரம் பண்ணியிருக்கலாம். கோடிக் கோடியாக பார்த்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. உலக மக்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டார். பல உலகக் கணினி நிறுவனங்கள் பல வகையில் உதவி செய்ய முன் வந்தன. பல நாடுகள் உயரிய விருதுகள் வழங்கின. அவர் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்தாலும் கணினி உலகம் அவரை விடவில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்னால் அனைத்துலக் கணினிச் சம்மேளனம் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது. உலகக் கணினி அறிஞர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். அதில் அவருக்கு மிக உயர்ந்த மரியாதைகள் செய்யப்பட்டன. அவர் அரங்கத்திகுள் நுழைந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று Standing Ovation என்று சொல்லப்படும் ராஜ மரியாதை செய்தார்கள்.

ஒரு கோடி ரிங்கிட் அன்பளிப்பாகவும் கொடுத்தார்கள். அதையும் அவர் ஓர் அறவாரியத்திற்கு கொடுத்துவிட்டார். இன்று கணினி உலகின் காதல் மன்னனாக வாழ்ந்து வருகிறார். அவருடைய நல்ல மனம் நல்ல குணம் நன்றாக இருக்கட்டும். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும்.

குமாரி. திவ்யா கன்னியப்பன், ஜெமாந்தா, சிகாமட்
கே:
HTML என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?

ப: Hyper Text Markup Language என்பதின் சுருக்கம். இணையப் பக்கங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் இணைய மொழி. 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவரும் திம் பெர்னர்ஸ் லீ தான். ஒரு சின்ன எடுத்துக்காட்டு:html

<HTML>
<HEAD>
<TITLE>Malaysia Nanban</TITLE>
</HEAD>

<BODY>Type here and save the file as .html</BODY>
</HTML>

ஓர் இணையப் பக்கத்தை உருவாக்க மேலே சொன்ன இணையக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஆ. சரவணன், ராசா, சிரம்பான்
கே: கணினியைத் திறந்ததும்
Not a valid Win32 application எனும் எச்சரிக்கை வருகிறது. என்ன செய்வது?

ப: நீங்கள் பயன்படுத்தும் Program எனும் நிரலி பழுதடைந்து போயிருந்தால் இந்த எச்சரிக்கை வரும். உங்களுடைய CD Drive எனப்படும் குறுந்தகடுச் செயலர் அழுக்கடைந்து போயிருந்தாலும் அப்படி வரும். சில சமயங்களில் நீங்கள் கேட்கும் நிரலி கணினியிலேயே இல்லை என்றாலும் இந்த எச்சரிக்கை செய்தி வரும். அத்துடன் File எனப்படும் உங்களுடைய கோப்பு. அதன் பெயர் மிக நீளமாகயிருந்தாலும் இந்தப் பிரச்னை.

Operating System எனப்படும் அடிப்படைச் செயலி கெட்டுப் போயிருந்தாலும் இந்த எச்சரிக்கை வரும். தொடர்ந்து இப்படி வந்து கொண்டிருந்தால் ஒரே ஒரு வழிதான். அடிப்படைச் செயலியை மறுபடியும் கணினிக்குள் பதிவு (Reinstall) செய்ய வேண்டும். விண்டோஸ் 98ல் இந்தப் பிரச்னை அதிகம். இப்போது உள்ள விண்டோஸ் XP. விண்டோஸ் Vista வில் இந்த எச்சரிக்கை வருவது இல்லை.

திருவே பாலசேனா, பத்து தீகா, ஷா ஆலாம்.
கே: என்னுடைய சில ஆவணங்கள்
, கோப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது படிக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். வழி இருக்கிறதா?

ப: Documents என்பதை ஆவணங்கள் என்று சொல்கிறோம். Folders என்பதைக் கோப்புகள் என்று சொல்கிறோம். windows_hidden_fileஇவற்றை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கச் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த ஆவணத்தின் மீது உங்கள் சுழலியை வைத்து வலது சொடுக்கு செய்யுங்கள். அதில் Hidden என்பதைச் ‘சரி’ என்று சொடுக்கி விடுங்கள்.

அப்புறம் உங்களுடைய கணினித் திறையில் ஆக மேலே போனால் Tools எனும் பகுதி வரும். அங்கே Folder Options என்பதில் View என்பதைத் தட்டினால் ஒரு செய்திப் பெட்டகம் வரும். Do not Show hidden files and folders என்பதைத் தட்டி விடுங்கள். அவ்வளவுதான். உங்கள் ஆவணம் காணாமல் போய்விடும். யாரும் பார்க்க முடியாது. அப்படி ஓர் ஆவணம் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதைவிட இன்னும் பல இரகசியப் பாதுகாப்பு நிரலிகள் வந்துள்ளன. இலவசமாகவும் கிடைக்கும். வேண்டும் என்றால் கேளுங்கள். இணைய முகவரியைச் சொல்கிறேன்.

எஸ். தம்பிராஜா, லுக்குட், நெகிரி செம்பிலான்.
கே:
Fonts அதிகம் இருந்தால் கணினி மெதுவாக வேலை செய்யுமா?

ப: Fonts எனும் எழுத்துருகள் அதிகமாக இருந்தால் கணினி மெதுவாக ஆரம்பிக்கும். Startup எனும் கணினித் தொடக்கம் ஆமை போல நடக்கும். ஆனால் ஆரம்பித்த பிறகு, வேலை தாமதம் ஆகாது. சரியா! தேவை இல்லாத எழுத்துருகளை நீக்கி விடுங்கள்.

Animated-Fontsசிலர் உலகத்தில் உள்ள எல்லாமே தங்கள் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார்கள். அது தப்பு. கணினி வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றால் கண்ட கண்ட குப்பைகளைக் கணினிக்குள் சேர்த்து வைக்காதீர்கள். கணினியை இலகுவாகச் செயல் பட வழி செய்யுங்கள். Control Panel க்குப் போய் Font எனும் கோப்புக்குள் போய் தேவைப் படாத எழுத்துருகளை நீக்கி விடலாம். பத்திரம்!

Arial, Century Gothic, Lucida Console, Sans Serif, Tahoma, Trebuchet, Verdana போன்ற எழுத்துருகள் கணினியின் உயிர் எழுத்துகள். அவற்றை ஒன்றும் செய்யக் கூடாது. அப்படியே நீங்கள் அழிக்க முயற்சி செய்தாலும் ஒன்றும் நடக்காது. கணினி அந்த எழுத்துருக்களை அழிக்க விடாது.

(ரவீந்திரன் குமார் <ranggiboys@live.com.my> தமிழ்ச்செல்வி <thamil.chelvi@yahoo.com> கந்தசாமி ஐகேசு <seega169@yahoo.com> இவர்கள் மூவரும் மின்னஞ்சல் மூலமாகக் கேள்விகள் கேட்டிருந்தார்கள். விரைவில் பதில் கிடைக்கும்.)

எல்.ஞானசேகரன், தாமான் ஸ்கூடாய், ஜொகூர் பாரு.
கே: சார் வணக்கம். கணினியும் நீங்களும் மிகவும் அருமையான பகுதி. எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நல்ல தகவல்களைக் கொடுக்கிறது. நன்றி. என்னுடைய வேண்டுகோள் இதுதான். கணினியில் இலவசமாக Games கிடைக்குமா. உதவி செய்யுங்கள்?

ப: கவலையை விடுங்கள். யாம் இருக்க பயமேன். கீழ்காணும் இணையத்தளங்களில் இலவசமாகக் கணினி விளையாட்டுகளைக் கொடுக்கிறார்கள்.

geeklogohttp://www.myplaycity.com அல்லது http://www.download07.info/games.htm அல்லது http://www.tackgames.net/ எனும் இணையத்தளங்களில் கிடைக்கும் விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்து ஆசை தீர விளையாடுங்கள்.

http://www.majorgeeks.com எனும் தளத்தில் கணினிக்குத் தேவையான நிரலிகளும் கிடைக்கும். தொடர்ந்து இந்த ‘கணினியும் நீங்களும்’ பகுதியைக் கவனித்து வர வேண்டும். புதிய புதிய விளையாட்டுத் தளங்களைப் பட்டியலிட்டுத் தருவேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: