ksmuthukrishnan எழுதியவை | 04/09/2009

கணினியும் நீங்களும் – பகுதி 5

NANBANசெ.காளீஸ்வரன், புந்தோங் ஜெயா
கே
: நான் இல்லாத போது என்னுடைய கணினியை யாராவது பயன் படுத்தியதைக் கண்டு பிடிக்க முடியுமா?

ப: முடியும். உங்கள் கண்ணியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தை வலது   சொடுக்குச் செய்யுங்கள். Right Click என்பதைத்தான் வலது சொடுக்கு என்கிறோம். அதில் Manage  எனும் அம்சத்தைச் சொடுக்குங்கள். உள்ளே போனால் System Tools என்பதில் System என்பதைச் சொடுக்கினால் விவரங்கள் தெரியும்.

systems managementஎந்த தேதி, எத்தனை மணி, எத்தனை நிமிடம், எத்தனை செகண்டுகள் கணினி பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனும் தகவல்கள் சரம் சரமாகக் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் உங்களுடைய துப்பறியும் வேலையைச்   செய்யலாம்.

இன்னும் ஒரு கூடுதலான விஷயம். உங்கள் கணினியில் எதைப் படித்தார்கள் என்பதையும் அக்கு வேர் ஆணி வேராகச் சொல்ல முடியும். அதற்கும் வழி இருக்கிறது. இப்போதைக்கு வேண்டாம். ஏனென்றால், பிரச்னை பெரிதாகிப் போக கடைசியில் பழி என் மேல் விழும்.

திருமதி.இரா.ரஞ்சிதம், ரூமா முரா அவாம், சிலாண்டார், மலாக்கா

கே: மல்லிகைப்பூ வாசம் வரும் கணினி வந்துவிட்டதாமே. அந்த அளவுக்கு கணினி உலகம் முன்னேறிவிட்டதா?

ப: இது பழைய விஷயம். மூன்றாண்டுகளுக்கு முன்னாலேயே இந்த மாதிரியான கண்டுபிடிப்பு வந்துவிட்டது. USB எனும் குறுந்தட்டகங்கள் இருக்கின்றன. அவற்றில் Trisenx என்பது அந்த வேலையைச் செய்யும். அதைக் கணினியில் செருகிக் கொள்ள வேண்டும். 20 வகையான வாசங்கள் இருக்கும். உங்களுக்கு என்ன மாதிரியான வாசனை வேண்டும். அதைத் தேர்வு     செய்யுங்கள். அவ்வளவுதான்.scent

உங்கள் அறை முழுமையும் கம கம வாசம் பரவும். எந்த நேரத்தில் அந்த வாசம் வர வேண்டும் எவ்வளவு நேரம் வரவேண்டும்  என்பதையும் நீங்கள் கணினியிடம்   சொல்லி விடலாம். அது மட்டுமல்ல. அந்த 20 வாசனைகளை வைத்துக் கொண்டு நீங்கள்     சொந்தமாக 2000 வகையான வாசனைக் கலவைகளைச் சொந்தமாக  உருவாக்கிக் கொள்ளலாம்.

அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் வழியாகவும் வாசம் உங்கள் கணினிக்குள் வரும். அப்புறம் வீடே கமகமக்கும். Digiscents எனும் நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. விலை மலிவு. RM100க்குள் இருக்கும்.

குமாரி இராசாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்

கே: 28.12.2008ல் நான் கேட்ட கேள்விக்கு நல்ல பதிலைக் கொடுத்தீர்கள். நன்றி. என் கணினி நன்றாகவும் வேகமாகவும் வேலை செய்து கொண்டிருந்தது. ரொம்ப சந்தோஷப்பட்டேன். மனதுக்குள் உங்களைப் பாராட்டினேன். ஆனால், திடீரென்று நேற்று என் கணினி வேலை செய்யவில்லை. பிப் பிப் பிப் என்று சத்தம் மட்டும் போடுகிறது. உள்ளே நுழைய முடியவில்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. கணினி ரிப்பேர் செய்பவரிடம் கேட்டேன். புதிதாக ஒன்றை வாங்கச் சொல்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பாவிடம் சொன்னால் சத்தம் போடுவார். என்ன செய்யலாம் ஒன்றும் புரியவில்லை?

ப: கணினியை மாற்றவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். கணினி தொடங்கும் போது இந்த மாதிரி மெல்லிய சத்தங்கள் வரும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் அர்த்தம் உண்டு. பிப் பிப் பிப் என்ற சத்தம் தொடர்ந்து வந்தால் இரண்டு காரணங்கள் உள்ளன.

உங்களுடைய Keyboard எனும் அச்சுப்பலகை வேலை சரியாக செய்யவில்லை என்று அர்த்தம். வேறொரு அச்சுப் பலகையை மாற்றிப் பாருங்கள்.

கண்டிப்பாக கணினி பழைய நிலைக்கு வரும். கவலைப் பட வேண்டாம். புதிய ஓர் அச்சுப்பலகை பேராங்காடிகளில் RM8 லிருந்து RM10க்குள் கிடைக்கும். வாங்கிப் பயன்படுத்துங்கள். அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் உங்களுடைய Power Supply எனும் மின் வழங்கி பழுதடைந்திருக்கலாம். அதையும் மாற்ற வேண்டியிருக்கும். மின் வழங்கியின் விலை RM40 க்குள் இருக்கும்.

எம்.ஜெயா, தாமான் சரோஜா, சிலிம் ரிவர்

கே: இணையம் என்பதின் தலைமையகம் எங்கே இருக்கிறது?

ப: இணையச் சம்மேளனத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு இணையப் பயன்பாடுகளை மாற்றி அமைக்கக் கூடாது என்பதற்காக World Wide Web Consortium எனும் ஒரு சம்மேளனத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அதன் தலைமையகம் அமெரிக்காவிலுள்ள Massachusetts Institute of Technology ல் இருக்கிறது. இதன் தலைவர் சர் திம் பெர்ணர்ட்ஸ் லீ. இணைய மொழியைக் கண்டுபிடித்தாரே அவர்தான். இதில் உலக நாடுகள் எல்லாம் அங்கம் வகிக்கின்றன. www3

இந்தச் சம்மேளனத்தின் அனுமதி இல்லாமல் வையக விரிவு வலையில் எதையும் மாற்றம் செய்ய முடியாது. உலக நாடுகளின் கணினி நிறுவனங்களை நான்கு வகையாகப் பிரித்து சேவைக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

மலேசிய நிறுவனங்கள் ஆண்டுக்கு RM20,000 கட்டணம் செலுத்துகின்றன. அமெரிக்க நிறுவனங்கள்  RM35,000 கட்டுகின்றன. பாகிஸ்தானிய நிறுவனங்கள்  RM5,000 கட்டுகின்றன. இதில் 434 நிறுவனங்கள் உறுப்பியம் பெற்றுள்ளன.

குமரன் பிரபாகர் லெட்சுமி, பெர்மனாக், சுங்கை பீலேக்

கே: கணினி மெதுவாக நகர்கிறது. மெதுவாக வேலை செய்கிறது. என்ன காரணம்?

ப: காரணங்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன். Hard Disk என்று சொல்லப்படும் தட்டகம் நிறைந்து வழியலாம். defragVirus எனும் அழிவிகள் அல்லது கணினிப் புழுக்கள் நுழைந்து பேரன் பேத்திகள் எடுத்திருக்கலாம். RAM எனும் தற்காலிக நினைவியின் சக்தி குறைந்து போயிருக்கலாம்.

ஆக, தேவையில்லாத ஆவணங்களைக் கழித்துவிடுங்கள். பெரிய பெரிய விளையாட்டு நிரலிகள் இருந்தால் அழித்துவிடுங்கள். தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைச் சுத்தம் செய்து விடுங்கள். Defrag எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். தடுப்பு அழிவிகளைப் பதிந்து கொள்ளுங்கள். தற்காலிக நினைவியின் கொள் சக்தியை கூட்டிவிடுங்கள்.

ஜான் பீட்டர்ஸ், ஆயர் குரோ, மலாக்கா

கே: கணினி வைரஸ்கள் என்னென்ன தீமைகளைச் செய்கின்றன?

ப: பட்டியல் போட முடியாது. Trojan எனும் கணினி அழிவி உங்களுடைய கணினிக்குள் நுழைந்து விட்டால் நீங்கள் செய்யும் வேலைகளைக் கவனித்து வரும். நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டை இலக்கங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும். talking-trojanஇணைய வங்கியில் பயன்படுத்தும் கடவுச் சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொள்ளும். அப்புறம் தனது எஜமானனுக்கு (Owner of the Virus) இணையத்தின் வாயிலாக சகவாசமாக ரகசியங்களை அனுப்பி வைக்கும்.

சில நச்சுநிரல்கள் கணினியின் நிரலிகளில் கோப்புகளை அழித்தல், கோப்புகளின் குணா திசயங்களை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் நீங்கள் பயன்படுத்தும் Programs எனும் நிரலிகளுடன் குழப்பத்தை உண்டு பண்ணும். கணினியை நிலைகுலையச் செய்யும். சில அழிவிகள் கணினி தொடங்குவதை மெதுவாக்கும்.

வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். அழிவி அல்லது நச்சுநிரல் எல்லாம் ஒன்றுதான். சில அழிவிகள் வெடிகுண்டு போல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து தம் அழிவு வேலைகளைச் செய்யும். ஒரு கணினி 30 வினாடிகளிலிருந்து 40 வினாடிகளுக்குள் இயங்குதளத்தைத் தொடங்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்தால் முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம்.

ஸ்.சுமிதா, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்

கே: கணினி அழிவிகளைத் தடுப்பது எப்படி?

ப: நல்ல ஒரு Antivirus எனும் தடுப்பு அழிவியை கணினிக்குள் பதித்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி AVG_Antivirus_logoupdates எனும் மேம்பாடு செய்ய வேண்டும். பிறரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தும் குறுந்தட்டகங்கள், USB போன்றவற்றை முறையாகச் சோதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

வேண்டாத விளையாட்டு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கிறதே என்று நண்பர்களிடம் இருந்து வாங்கி, சகட்டுமேனிக்கு உபயோகிப்பதைக் குறைப்பது நல்லது. அதிகாரப்பூர்வமில்லாத இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம். முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி அழிவிச் சோதிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.

மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் உங்களுக்கு தெரிந்தவராக இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். Autorun எனும் தானியங்கி முறையில் கோப்புகளை இயங்கவிட வேண்டாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: