ksmuthukrishnan எழுதியவை | 21/08/2009

எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா

’எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா’ இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க!
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.

ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள்.

கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.

பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள். நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாது தான். இருந்தும் போகலையே! “இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியே கிளம்பியது. கந்தசாமி – “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது. ”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” – செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.
இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும். அது, “எவ்வளவோ பண்ணிட்டோம்.
இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி. ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்… “ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் கந்தசாமி. ”
இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”
கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான்.

மூளைக்காரன் போல! கந்தசாமி ஆரம்பித்தார். மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” – கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”வேலை யாருக்குக் கிடைத்திருக்கும் என்று நீங்கள் நினக்கிறீர்கள்?
நம்ப கந்தசாமிக்குத்தான்!
வாழ்க கந்தசாமி!
நன்றி நரேஷ்
Advertisements

Responses

 1. //உங்களுடைய பதிவிலிருந்து எடுத்தேன். பரவாயில்லை. சரவணக்குமாருக்கு நன்றி சொல்வோம். எதை எடுத்து எழுதினாலும் அது மற்றவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். படித்து மகிழ வேண்டும். நம்முடைய நோக்கம் அதுதானே//

  மிகச் சரியே!!!

  எனக்கு மலேசிய இலக்கிய உலகைப் பற்றி அதிக பரிச்சயம் இல்லை சார்…அதனால்தான் புதிதாக என்று சொல்லி விட்டேன், மன்னிக்கவும்…எனது பின்னூட்டத்தை சரியான முறையில் உள் வாங்கிக் கொண்டது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது…

  மிக்க நன்றிகள்

  • அன்புள்ள நரேஷ் அவர்களுக்கு,
   தங்களின் பதிலுக்கு நன்றி. தாங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்த தவறும் நடக்கவில்லையே. கவலையை விடுங்கள்.

   உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நமக்கு தெரிந்தவர்களின் அனைத்து வலை மனைகளையும் படிப்பது என்பது இமயத்தில் ஏறி இறங்கி வருவது போல இருக்கிறது.

   திகைப்பூட்டும் வலை மனைகள். நாம் கண்டம் விட்டு கண்டம் பிரிந்து இருந்தாலும் நம்முடைய தாய் மொழி நம்மை மிக நெருக்கத்திற்கு கொண்டு வருகிறது.

   அந்த வகையில் இணையத்திற்கு முதற்கண் நன்றியைச் சொல்ல வேண்டும்.

   நம்முடைய இந்திய-மலேசிய உறவுகள் நீடிக்க வேண்டும்.

   வாழ்த்துகள்.

 2. அன்புள்ள நரேஷ் குமார் அவர்களுக்கு,
  உங்களுடைய பதிவிலிருந்து எடுத்தேன். பரவாயில்லை. சரவணக்குமாருக்கு நன்றி சொல்வோம்.
  எதை எடுத்து எழுதினாலும் அது மற்றவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். படித்து மகிழ வேண்டும். நம்முடைய நோக்கம் அதுதானே.
  உங்களுடைய கருத்திற்கு நன்றி.

 3. //புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்…நிறைய எழுதுங்கள்,//

  நண்பர் ந‌ரேக்ஷ் அவர்களே! ம‌லேசிய தமிழ் எழுத்துலகில் விழுது விட்ட ஒரு ஆலமரத்திற்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள்! இவர் நாடறிந்த ஒரு நல்ல எழுத்தாளர், அவரின் சிறந்த எழுத்து வடிவங்கள் இங்கே நாளிதழ்களின் நடுப்பக்கங்களாக வலம் வந்து கொன்டிருக்கின்றன. எங்களைப் போன்ற‌ வளரும் பல பதிவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர், அய்யா அவர்களைப்பற்றி மேலும் நிறைய எழுதலாம் ஆனால் நீங்களே இனி வரும் அவர் படைப்புக்களை தொடரப்போகிறவர் என்பதால் நான் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்!

  • அன்பு சிவனேஸ் அவர்களுக்கு, வணக்கம். வெகு நாட்களாக Blogging பக்கம் போகவில்லை. அதனால் உங்கள் கடிதத்தைப் பார்க்க காலம் தாழ்ந்து விட்டது. ஓர் அன்பு வேண்டுகோள். என்னை ஓர் ஆலமரத்திற்கு ஒப்பிட்டு சொல்லியிருப்பதை… ஏற்க முடியவில்லை. பலருக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். உண்மைதான். அதற்காக என்னை ஆலமரத்திற்கு ஒப்பிடலாமா. விரைவில் சந்திப்போம். நன்றி.

 4. அண்ணே மன்னிக்கனும்.. கதை நல்லா இருக்கு ஆனா பின்னூட்டம் புரியல!!!

  அப்புரம் இந்த WORD Verification தூக்கி விட்டுடுங்க!!!

  • நம்ப கந்தசாமி தமிழில் பேசியதை செர்போ-க்ரோட் மொழி என பில் கேட்ஸ்ஸும், தேர்வுக்கு வந்த இன்னொருவரும் நினைத்துக் கொண்டார்கள். ஒரு நகைச் சுவைக்காக எழுதப்பட்டது.
   கருத்திற்கு நன்றி.

 5. முத்துகிருஷ்ணன்,

  வருகைக்கு நன்றி…

  உங்களுடைய இந்தப் பதிவின் இறுதியில் எனக்கு எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்கள், எதற்காக என்று தெரியவில்லை…

  உண்மையில் இந்தப் பதிவு நான் எழுதவில்லை…www.saravanakumaran.com ல் நான் படித்து ரசித்தது, எங்கோ தவறு நேர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்…

  புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்…நிறைய எழுதுங்கள், ஒரு சின்ன சஜஸ்சன்…

  உங்களுடைய பதிவுகள், வகைகள், டேக் வார்த்தைகள் உங்கள் வலைப்பதிவின் பக்கத்திலேயே வருவது போல் அமித்துக் கொள்ளுங்கள்….

  உங்களுடைய மற்ற பதிவுகளைப் பார்க்க தொகுப்புகள் பகுதிக்குச் சென்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது…

  மீண்டும் நன்றி!!!

  நரேஷ்
  http://www.nareshin.wordpress.com


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: